பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓ, லுவினா! ரமன் உன் கடிதம் என் உடலைச் சுட்டது; உள்ளத்தைச் சுட்டது: உயிரைச் சுட்டது. ஒரு கணம் ஒன்றும் புரியாதவனாய், ஒன்றும் விளங்காதவனாய் நிலை குலைந்தேன்; தலை சாய்ந்தேன். அடுத்தகணம் என் கவிதா ரஸனையும், உன் தேன் தமிழ் மொழியில் நான் கண்ட தெளிவும், அதன் ஒளியும் என் கூம்பிய உள்ளத்தை, வாடி வதங்கிய இதயத்தை மெல்ல மலர்வித்தன. மலர்ந்த மனத்தில் தென்றல் புகுந்தது; மலர் மணம் கமழ்ந்தது. காரணம், என் அன்பின் உருவம் லுவினாதேவியின் கடிதத்தில் நான் வெறும் எழுத்தைக் காணாமல், பேசும் அவள் இதயத்தைக் கண்டதுதான்! வேறு எப்படி எழுதுவாள்?. நான் எழுத்தாளன் என்றால் என் தேவி எழுத்தோவியம் அல்லவா? நான் கதாசிரியன் என்றால் என் காதல் மோகினி கதாசிரியை அல்லவா? என் கண்ணே! கொஞ்ச நாட்களாக என் மனம் வெம்பி வெதும்பிக் கொண்டிருக்கிறது; யோசிப்பதற்கே சக்தியில்லை - அப்படி யோசித்தாலும் ஒரே குழப்பந்தான். அந்தக் குழப்பத்திலும் உன் கடிதத்தைப் படிக்கும்போது இரண்டு இடங்களில் நான் சிரித்தேன். 'என் காதல் கணிக்கு ஏன் இப்படி மதி மயங்கி விட்டது? என் எழிலரசிக்கு ஏன் இந்தச் சிறு விஷயம் விளங்காமல் போய்விட்டது?’ என்று வேறு எண்ணி எண்ணி வியந்தேன். அதாவது: ஜாதி மதம், உற்றார் பெற்றார், ஊர் உலகம் என்ற ஆறு பாசக் கயிறுகள் உன்னை இறுக்கி இடுக்கி இணைத்துப் பிணைத்துக் கொண்டிருப்பதாகவும், அவைகளை ஒருங்கே அறுக்கவோ, அவிழ்க்கவோ முடியாமல் தவியாய்த் தவித்துக் கொண்டிருப்ப தாகவும் நீ எழுதியிருக்கிறாய்.