பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 நான் எழதி விட்டேன் - அது தப்பு கமல், தப்பு: - அவை பாசக் கயிறுகள் அல்ல; பெற்றோரைத் தவிர மற்ற ஐந்தும் விஷக் கொடிகள். அந்தக் கொடிகளை நாம் அவிழ்த்து விடலாம், முடியாவிட்டால் அறுத்தும் விடலாம். ஆனால், அறுபடும்போது அவை கக்கும் விஷம் நம்மை அழித்துவிடுமே! தாய் தந்தையற்ற நீ தனி; சுதந்திர புருஷன்! - உனக்கிருக்கும் அந்தப் பாக்கியம் எனக்கு ஏது? அவர்கள் தடியால் அடித்தால் தாங்கலாம்; உள்ளத்தால் அடித் தால் தாங்க முடியுமா, கமல்? - எனவே, அம்மாவின் கண்ணிரும் அப்பாவின் கெஞ்சுதலும் என்னைச் செயலற்றவளாக்கி விட்டன. கடமைக்கும் காதலுக்கும் இடையில் அகப்பட்டுக் கொண்டு நான் திணறுகிறேன் - இதை நீ புரிந்துகொண்டிருப்பாய்; ஆனால் உணர்ந்திருக்க மாட்டாய்! இன்ப ஊற்றே! நான் யோசித்து யோசித்துப் பார்த்து விட்டேன். சிந்தித்துச் சிந்தித்து ஒரு முடிவிற்கு வந்து விட்டேன்! - இதயத்தால் ஒன்றாகி விட்ட நம்மைப் பிரித்து இனி தெய்வத்தால்கூட வாழ வைக்க முடியாதுதான் - தெரியும் கமல், தெரியும் தெரியாமலோ, புரியாமலோ எதையும் நான் எழுதவில்லை. என் கற்பனையில் எழுந்த எண்ணங்கள், என் உள்ளத்தில் ஊறிய ஆசைகள் அனைத்தும் அழிந்துவிடும் என்றும் தெரியும்; மக்கி மடிந்து மண்ணோடு மண்ணாகி மறையும் வரை அந்த வேதனை நம்மைச் சும்மா விடாதென்றும் தெரியும். ஆனால்... என் ஆசைக் கனலே! உன் லுவினாவிற்கு மட்டும் ஆசைகள் இல்லையா? - அவள் எப்படி யெல்லாம் உன்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள், தெரியுமா? - நீ எப்பொழுதும் அவள் அருகிலேயே இருக்க வேண்டும்; கைகள் நாலும் எழுத்தற்ற மொழியிலே காதல் கதை பேச வேண்டும்; அவள் காதருகே வந்து, 'லுவினா, லுவினா என்று நீ ஜபிக்க உன் காதருகே வந்து 'கமல், கமல் என்று அவள் உருப்போட வேண்டும். நெற்றியில் விழுந்து விளையாடும் முடியை ஒதுக்கி அவள் முகத்தையே நீ பார்க்க வேண்டும்; இமைகள் கண்களை மறைக்க அவள் நாணித்