பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 உறுதியற்ற லட்சியமே! இதயத்தால் கமலை நீங்கள் மணந்து விட்டதாகச் சொல்கிறீர்கள். ஆனால், அவன் உங்களை மறந்துவிட வேண்டும் என்கிறீர்கள்!-இதற்கு என்ன அர்த்தம்?-ஐயோ, இதயத்தால் ஒருவனையும், உடலால் இன்னொருவனையும் மணக்க நீங்கள் துணிந்து விட்டீர்களா, என்ன? இது உண்மையானால், இதை விட அபத்தமானது உலகத்தில் வேறெதுவும் இருக்க முடியாது -ஏன் தெரியுமா?-இதனால் தான் நாகரிகம் புழுத்து நெளியும் மேல் வர்க்கத்தாரிடையே விபசாரம்' மலிகிறது, அம்மா! நீங்களோ கமலைப் பரிபூரணமாக விட்டுவிடத் தயாராயில்லை. இன்னும் 'என் இன்பமே, என் இதயக் கனலே!' என்று அழைத்து ஆனந்தப்படுகிறீர்கள். அவரைப் பற்றிய இன்ப நினைவுகள் பல இன்னும் உங்கள் உள்ளத்திலே குடி கொண்டிருக்கின்றன. ஆனால் அவரை மட்டும் நம்பினால் அவருடைய பொருளாதார நிலை உங்கள் வாழ்க்கை வசதிகளைக் குறைத்துவிடுமே என்று அஞ்சுகிறீர்கள். இதனால் வேறொருவன் மூலம் வாழ்க்கை வசதிகளைத் தேடிக் கொண்டு, அதன் வளத்துக்கு மட்டும் கமலை நாட நீங்கள் விரும்புகிறீர்கள் என்றாகிறது - அட, கர்மமே! இதை என்ன வென்று சொல்ல? இது அநியாயம் அம்மா, அநியாயம்! - இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் அறுக்கப்பட வேண்டிய ஆறு பாசக் கயிறுகளை அறுக்க உங்கள் கோழை நெஞ்சம், சபலச் சித்தம் இடந்தரவில்லை. ஆனால் கமலின் ஜீவனான அந்த ஒரே ஒரு பாசக் கயிற்றை மட்டும் ஈவு இரக்க மின்றி அறுத்துவிட அதே நெஞ்சம், அதே சபலச்சித்தம் தாராளமாக இடந்தருகிறது-அந்தோ, பரிதாபம்! இன்னொரு விஷயம் உங்களுக்குத் தெரியுமா? - ஒரு நூற்றாண்டுக்கு முன்னே, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிகளைச் சகல சாம்ராஜ்யங்களும், சட்டங்களுமாகச் சேர்ந்து பிடரியைப் பிடித்து ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நெட்டி நெட்டித் தள்ளின. குழந்தை குட்டிகளோடு ஊர் ஊராக அலைந்தனர் அவர்கள்; நாடோடிகளாகத் திரிந்தனர் அவர்கள்; பட்டினியால் துடித்தனர் அவர்கள்!-சாப்பிட ரொட்டியின்றி அவன் தன் மேலங்கியை விற்றான்-அந்தத் தரித்திர நாராயணன் யார் என்கிறீர்கள்? நீங்கள் இன்று பேசுகிறீர்களே பொருளாதார