பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 அந்தச் சத்தத்திலிருந்து ஆளை இனங் கண்டு கொண்டு, 'ஏன் ஆரோக்கியசாமி, இங்கே இருந்த இட்டிலியைப் பார்த்தாயா?’’ என்று கேட்டாள் முத்தாயி. 'பார்த்தேன், பார்த்தேன்!” என்று அவளுக்குத் தெரியாமல் அந்த இட்லிகளை எடுத்துக் கொண்ட அவன், அவற்றைப் பிட்டுப் பிட்டு விழுங்கிக் கொண்டிருந்தான்! விஷயத்தைப் புரிந்துகொண்ட முத்தாயி அவனுடன் சண்டை பிடிக்கவில்லை; போலீஸாரைக் கூப்பிட்டு G| ഖ ഞാ ഞT ஒப்படைக்கவும் இல்லை - 'ஐயோ பாவம், ரொம்பப் பசி போலிருக்கிறது - சாப்பிடு, சாப்பிடு!' என்று தாராளமாக அனுமதி கொடுத்து விட்டாள். மகன் வந்து, 'என்னம்மா, இட்டிலியைச் சாப்பிட்டு விட்டாயா?” என்று விசாரித்தான். 'இவ்வளவு நேரம் உனக்காகக் காத்திருந்து பார்த்துவிட்டு இப்பொழுதுதான் சாப்பிட்டேன் - கொண்டா, தண்ணிரை!” என்று வாங்கிக் குடித்துவிட்டு, 'இன்று வேலையுண்டா, உனக்கு?’ என்று கேட்டாள் அவள். 'இல்லையம்மா, அடுத்த வெள்ளிக் கிழமை கப்பல் வந்தால்தான் வேலை!' என்றான் அவன். சரி, புறப்படு!’ என்று அருகிலிருந்த கோலை எடுத்து ஊன்றிக்கொண்டு எழுந்தாள் அவள். ‘'வேண்டாம்மா, எனக்கு வெட்கமாயிருக்கும்மா! உன்னோடு பிச்சை எடுக்க இனிமே நான் வரவே மாட்டேம்மா...'

  1. & லே என்னடா, வெட்கம்? நாமென்ன திருடுகிறோமா,

ரு ஹ. தில்லுமுல்லு செய்கிறோமா...?” 'திருடர்களும் தில்லுமுல்லுக்காரர்களும் வெட்கப்பட்டால் தான் நமக்கெல்லாம் இந்தக் கதி வந்திருக்காதேம்மா!' என்றான் அவன். 'அந்த வம்பெல்லாம் நமக்கெதுக்கு? - நீ வா!' என்றாள் அவள். 'இந்த மனோபாவத்தைத்தான் அவர்களும் விரும்பு கிறார்கள்!' 'அதற்காக...?”