பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 'அவர்களைப்போல நாமும் திருடர்களாக மாற வேண்டும். எனக்கென்னமோ பிச்சை எடுப்பதைவிட அதுதான் மேலெனத் தோன்றுகிறது...' "ஐயோ, வேண்டாம் கண்ணு - ஒருவர் பொருளை ஒருவர் திருடுவது பாவம்!” 'புண்ணியத்தைக் கண்டால்தான் பாழும் பொருள் ஒட்டம் பிடிக்கிறதேம்மா!' 'அதனால் என்ன? ஆண்டவன் கூடவா நமது பங்கில் இருக்க மாட்டார்?' 'ஏன் இல்லாமல்? - இல்லாவிட்டால் பிச்சை எடுத்துத் தின்ன உபயோகமாயிருக்கட்டுமென்று உன் கண்களைப் பறித் திருப்பாரா?' பலே பலே, அப்படிச் சொல்லு!’ என்று இந்தச் சமயத்தில் உற்சாகம் மிக்க ஒரு குரல் கேட்டது. ரத்தினம் திரும்பிப் பார்த்தான். 'நீ திருடனாக மாறினால் நானும் திருடனாக மாறத் தயார்' என்று அவனுக்குத் தன் மேலான ஆதரவைத் தெரிவித்துக் கொண்டான் அவன் நண்பன் அந்தோணி, 'அவ்வளவுதான்; இப்படி எல்லோருமே மாறிவிட்டால் உங்கள் ஏசுவின் உலகம் என்ன ஆகும், தெரியுமா? - சைத்தானின் உலகமாக மாறும்!” என்றாள் முத்தாயி. 'ஆஹா இருப்பவன் வீட்டை இல்லாதவன் கொள்ளை யடிப்பதற்கு மட்டும் துணிந்துவிட்டால் புரட்சி முளைக்கும்; புத்துலகம் பூக்கும்!' என்றான் அந்தோணி. 'இரண்டும் நடக்காது; இருட்டறையில் இடந்தான் கிடைக்கும்!' என்றாள் முத்தாயி. 'தனித் தனியாகச் சென்று ரகசியமாகக் கொள்ளை யடித்தால்தானே? - நாங்கள்தான் ஒரே கூட்டமாகச் சென்று பகிரங்கமாகக் கொள்ளையடிக்கப் போகிறோமே!” என்றான் ரத்தினம். இந்தச் சமயத்தில் 'மூளையில்லாத பயல்கள்!' என்று யாரோ முணுமுணுக்கும் சத்தம் அவர்கள் காதில் விழுந்தது. அந்தோணியும் ரத்தினமும் திரும்பிப் பார்த்தனர்; எதைச் செய்தாலும் ரகசியமாகச் செய்யுங்கள். காசுக்குக் காசும் கிடைக்கும் கெளரவத்துக்குக் கெளரவமும் நிலைக்கும்!” என்று தொடர்ந்தான் 'இட்டிலித் திருடனான ஆரோக்கியசாமி.