பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 'சொல்கிறேன் - இப்போ எங்கே போக வேண்டும் என்று நீங்கள் சொல்லவே யில்லையே?’ என்றான் ஓ.கே. 'ஸ்பென்ஸர்' என்று சொல்லி விட்டு, 555 சிகரெட் ஒன்றை எடுத்துத் தட்டிப் பற்ற வைத்தார் படாதிபதி. 'எங்கள் கதையில் உங்களுக்கொன்றும் சம்பந்த மில்லையே?’ என்றான் ஓ.கே. { 'பரவாயில்லை, சொல்லு?-படத்துக்கு உபயோகமாகுமா என்று பார்க்கிறேன்!” "சலவையாளர் ஒருவர் வீட்டில் நாய் ஒன்று இருந்தது....” 'கழுதைதானே இருக்கும்?' "அதுவும் இருந்தது; ஆனால் அது நம் பீதாம்பரத்தைப்போல அசட்டுக் கழுதையாயிருந்தது! - ஒரு நாள் சலவையாளர்மேல் நாய்க்கு ஏதோ கோபம்; திருடன் வீட்டருகே வந்த பிறகுங்கூட அது குரைக்காமல் இருந்தது. கழுதையால் சும்மா இருக்க முடியவில்லை; நாய்க்குப் பதிலாகத் தானே கத்தி எஜமானை எழுப்ப முயன்றது-அதன் பலன் என்ன வென்கிறீர்கள்?தூக்கங்கெட்ட கோபத்தில் சலவையாளர் எழுந்து வந்து, கழுதையை வெளுவெளு' என்ற வெளுத்துவிட்டார்!’ 'சரிதான், நீயும் அவனும் வேண்டுமானால் கழுதையும் நாயுமாக இருங்கள்; என்னைச் சலவையாளராக்க வேண்டாம்!” என்றார் பத்மனாபன். 'இதற்குத்தான் அப்பொழுதே நான் யோசித்தேன்!' என்றான் ஓ.கே. | அதற்குள் கார் ஸ்பென்ஸரை அடைந்தது. 'உனக்கு 'ஸ்பான்ஜ்’ என்றால் என்ன வென்று தெரியுமோ?' என்று கேட்டார் படாதிபதி. 'ஒ, தெரியுமே! காய்ந்த பீர்க்கங் காயின் கூடுக்குப் பதிலாகப் பெரிய மனிதர் விட்டுப் பெண்கள் உடம்பைத் தேய்த்துக் குளிப்பதற்காக உபயோகிக்கும் கடற்பஞ்சு!” § 'பலே, நம்ம ஹீரோயின் நிசிலிலாவுக்கு அது ஒன்று வேண்டுமாம்; நீ எதற்கும் நாலாக வாங்கிக் கொண்டு வந்துவிடு!” என்று இரு நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவனிடம் நீட்டப் போனவர் திடீரென்று ஏதோ நினைத்துக்கொண்டவராய்,