உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 97

ஒருநாள் இரவு; ஆழ்ந்தத் தூக்கத்திலிருந்த அவர், ‘முடியாது! நானாவது, எனக்குக் கிடைத்த வருமானத்தில் உனக்குப் பங்கு கொடுப்பதாவது? முடியாது; முடியவே முடியாது!” என்று அலறினார். நான் என்னமோ, ஏதோ என்று பயந்துபோய் அவரை எழுப்பினேன் - அவ்வளவு தான்; ஆத்திரத்துடன் அவர் எழுந்து உட்கார்ந்து, அடே வள்ளுவா! யார் என்று நினைத்தாய், என்னை? உன்னுடைய தாடியைப் பிய்த்து எறிந்து விடுவேன், ஜாக்கிரதை! உன்னாலா எனக்குப் பொருளும் புகழும் கிடைத்தன? இல்லை; இல்லவே இல்லை. என்னைப் போன்ற உரை யாசிரியர்களால் தான் உனக்கு பொருள் கிடைக்கா விட்டாலும் புகழாவது கிடைத்தது, கிடைத்து வருகிறது என்பதை நீ நினைவில் வைத்துக் கொள் இரண்டே வரிகளில் நீ எழுதிவிட்டுச் சென்ற குறளுக்குப் பக்கம் பக்கமாக விளக்கம் எழுத நான் என்ன பாடுபட்டிருக்கிறேன் தெரியுமா? இல்லாவிட்டால் அன்று ஓரணா, இரண்டனாவுக்குக் கூட வாங்குவார் இல்லாம லிருந்த உன்னுடையக் குறளை, இன்று ஒரு ரூபாயிலிருந்து பத்து ரூபாய் வரை விலை வைத்து விற்க முடியுமா? அதன் மூலம் ஆயிரக்கணக்கான ரூபாய்களைத் தான் ஆதாயமாக அடைய முடியுமா? இதைப் புரிந்து கொள்ளாமல் என்னுடைய தொண்டை ‘தூங்கியவன் தொடையில் கயிறு திரிக்கும் தொண்டு, என்று சொல்ல என்னத் துணிச்சல், உனக்கு 2 மாட்டேன்; ஒரு காசு கூட உனக்கு நான் கொடுக்க மாட்டேன்’ என்று கையை இறுக மூடி, இரண்டு கால்களுக்கும் இடையிலிருந்த இடுக்கிலே வைத்துக் கொண்டு கத்தினார், சிறு பிள்ளைத் தனத்துடன்

நான் சிரித்தேன்; சிரித்துவிட்டு, “இங்கே பாருங்கள் - நான் வள்ளுவன் இல்லை; உங்கள் நறுமணம்’ என்றேன்.

அவர் தம் கண்களை கசக்கி விட்டுக் கொண்டு என்னை ஒரு முறைக்கு இருமுறையாக ஏற இறங்கப்

to. Loir – 7