பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்த்தார். பிறகு, ‘நல்லவேளை, எல்லாம் வெறும் கனவுதானா?” என்று பெருமூச்செறிந்தார்.

“அப்படி என்ன நடந்து விட்டது, உங்கள் கனவில்?” என்றேன், நான்.

‘அந்த வள்ளுவன் இல்லை, வள்ளுவன் - அவன் இன்று என் கனவில் வந்தான்!’

‘வந்து?”

‘அவன் எழுதிய குறளுக்கு நான் ஒன்றுக்கு இரண்டாக உரைஎழுதி விட்டேனாம்!”

‘இரண்டு உரைகளா?”

‘ஆம் இரண்டு உரைகளென்ன, வாங்குவதற்கு ஆள் இருந்தால் இருநூறு உரைகள் கூட நான் எழுதுவேன் - அதைக் கேட்க இவன் யார்?” +

‘அவர்தானே மூலகர்த்தா?”

‘யாருக்கு எது மூலம் என்று யார் கண்டார்கள்? என்னமோ அவன் பெயருக்கு இப்போது ஒரு மெளசு ஏற்பட்டிருக்கிறது; அதை வைத்துக் கொண்டு பொருள் ஈட்டுவதும் என்னைப் போன்றவர்களுக்கு எளிதாயிருக்கிறது!”

“அந்தப் பொருளில்தான் அவர் தமக்குரியப் பங்கைக் கேட்கிறாராக்கும்?”

“ஆம், இன்று நம் விற்பனையாளரிடமிருந்து முப்பதினாயிரம் ரூபாய்க்குச் செக் வந்ததல்லவா? அதில் பதினைந்தாயிரம் ரூபாய் அவனுக்கு வேண்டுமாம் - இனி யார் அவனுடைய குறளுக்கு உரை எழுதாமலிருக் கிறார்களோ, அவர்களுக்குப் பரிசு கொடுக்க'