பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 விந்தன்

“அப்படிப்பட்டவரை நீங்கள் ஏன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுகிறீர்கள்?”

‘பைத்தியக்காரி! இன்று நமக்குக் கிடைத்த முப்பதினாயிரம் ரூபாய் செக்கில் அந்த ரகசியம் தானே அடங்கிக் கிடக்கிறது?” என்று கூறிச் சிரித்தார் அவர்.

இதிலிருந்து என்னத் தெரிகிறது? - வள்ளுவர் யாருடைய உள்ளத்தில் வாழ்ந்தாலும் வாழாவிட்டாலும் இவரைப் போன்றவர்களின் உள்ளங்களிலே வாழவில்லை; உதடு களிலே தான் வாழ்கிறார் என்று தெரியவில்லையா? - இதைப் புரிந்துக் கொள்ளாமல் தான் தனக்குக் கிடைக்காமல் கிடைத்த ஓரிரு வேலைகளைக் கூட என் அண்ணா வெறுக்காமல் வெறுத்து ஒதுக்கிவிட்டு வந்து விட்டான்.

தந்தை இருக்கிறார் என்ற தைரியத்தில் வேண்டுமானால் அவன் இப்படியெல்லாம் நடந்து கொள்ளலாம்; மாமா இருக்கிறார் என்ற தைரியத்தில் அவன் இப்படியெல்லாம் நடந்து கொள்ளலாமா? - அதிலும், அந்த மாமா அசட்டு மாமாவாயிருக்கும் போது?

எனக்கு ஒன்றுமே புரியவில்லை; ‘ஏன் அண்ணா உன்னால் வேலைக்குப் போக முடியவில்லையென்றால் சொல்லிவிடு; நானாவது வேலைக்குப் போகிறேன்!’ என்றேன் நான், ஒருநாள் அவனிடம்.

‘என்ன வேலைக்குப் போவாய், நீ9 என்று கேட்டான், அவன்.

“ஏதாவது ஒரு வேலைக்கு: இனி என்னால் ஒரு கணம் கூட இங்கே இருக்க முடியாது!’

‘ஏனாம்?"