மனிதன் மாறவில்லை 101
இதற்கு நான் என்ன சொல்வேன்? - இன்னும் நாம் என்ன பச்சைக் குழந்தைகளா, இன்னொருவருக்குப் பாரமாயிருக்க?’ என்று சொல்லி வைத்தேன்.
உண்மையில் அந்தச் சம்பவம் நடந்த அன்றிலிருந்து எனக்கு அங்கே இருக்கத்தான் பிடிக்கவில்லையென்றால் சாப்பிடக் கூடப் பிடிக்கவில்லை. பாட்டிக்கும் மாமிக்கும் பயந்து மாமா வாங்கிக் கொடுத்த ஆடையணிகளை வேண்டுமானால் வேண்டா வெறுப்பாக அணிந்துக் கொண்டிருக்கலாம்; அவர்களுக்குப் பயந்து சாப்பிட்டுக் கொண்டும் இருக்க வேண்டுமென்றால் அந்த வீடே நரகமாயிருந்தது, எனக்கு.
இந்தக் கஷ்டத்திலிருந்து விடுதலையடைய வேண்டு மானால், எனக்கிருந்த வழிகள் இரண்டே இரண்டுதான் - அவற்றில் ஒன்று, என் அண்ணாவும் நானும் உடனடியாகத் தனிக்குடித்தனம் ஆரம்பிப்பது; இன்னொன்று சென்னையி லிருக்கும் சித்தியைத் தேடிச் சென்று, அவளிடம் சரணாகதி அடைந்துவிடுவது வேறு வழி? - அப்பாதான் ‘ழரீமான் தர்மசங்கடமாகப் போய்விட்டாரே?
இந்த இரண்டில் ஏதாவது ஒரு முடிவுக்குச் சீக்கிரம் வந்து விடவேண்டும் என்பதற்காகவே என் அண்ணாவை நான் அடிக்கடி வேலை, வேலை என்று நச்சரித்து வந்தேன்; அத்துடன், அவன் வேலைக்குப் போகாவிட்டால் நான் வேலைக்குப் போய்விடுவேன் என்று பயமுறுத்தியும் பார்த்தேன் - அவனோ எதற்கும் அசைந்து கொடுப்பவனா யில்லை ‘பிழைத்தால் தன்மானத்தோடுதான் பிழைப்பேன்! என்று சொல்லி, என் மானம் பறிபோவதைப் பற்றி ஏதும் அறியாதவனாயிருந்து வந்தான்!
இந்த நிலையில் நான் என்ன செய்வது? அண்ணா பெங்களுருக்கு வர அப்பாவை ஏமாற்றியது போல நானும்