பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 விந்தன்

அவ்வளவுதான்; ‘எவ்வளவு நன்றி கெட்டவளாகப் போய்விட்டாய், நீ” என்று சொல்லிக் கொண்டே அவர் கொஞ்சம் பின்வாங்கினார்.

‘உங்கள் உதவிக்கு என் நன்றி என்றும் இருக்கும்; அதற்காக என் இதயத்தில் உங்களுக்கென்று ஒர் இடமும் எப்போதும் இருக்கும் - நீங்கள்தான் அதை விரும்பாமல் வேறு எதையோ விரும்புகிறீர்கள்!’ என்றேன் தான் பொறுமையிழந்து.

அதற்குள் அங்கே வந்த மாமி, ‘என்ன நறுமணம், என்ன வேணும் உனக்கு?” என்று கேட்டாள்.

இங்கே இருக்கப்போவது இன்னும் கொஞ்சம் நேரம் தானே? அதுவரை மாமா என்னைப் பற்றி என்ன வேண்டு மானாலும் கற்பனை செய்துக் கொண்டு போகட்டும் என்று துணிந்தவளாய், “இங்கே இருந்த சாந்தைக் காணோமே, நீங்கள் பார்த்தீர்களா?’ என்று நான் அப்போதும் சமாளித்து வைத்தேன். -

‘இதற்குத்தானா என்னைக் கூப்பிட்டாய்? - இதோ இருக்கிறது பார், எடுத்துக் கொள்!"என்று சொல்லிவிட்டு அவள் திரும்பினாள்.

‘இதென்ன சங்கடம், இன்னும் கொஞ்ச நேரம் இவளை இங்கேயே எப்படி இருக்க வைப்பது?’ என்று நான் தவிக்கையில், ‘என்ன நறுமணம், தயாராகி விட்டாயா?” என்று கேட்டுக்கொண்டே வந்து சேர்ந்தான் அண்ணா.

‘நல்லவேளை, பிழைத்தோம்!” என்று பெருமூச்சு விட்டேன் நான்.

நான் மட்டுமா, மாமாவும் பிழைத்தார் என்றுதான் சொல்லவேண்டும் - இல்லையா?