பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை - 109

போய் வாருங்கள்!’ என்று அண்ணா விடைகொடுத்து அனுப்பினான் அந்த அபாக்கியவதிக்கு.

‘இனி நீங்கள் மட்டும் இங்கே இருந்து என்ன செய்யப்போகிறீர்கள்? பேசாமல் இந்த வீட்டை விற்றுவிட்டு என்னுடன் பெங்களுர்க்கு வந்து விடுங்களேன்!” என்றார் மாமா.

அண்ணா என் முகத்தைப் பார்த்தான் - நான் தயங்க வில்லை, ‘அது எனக்கு அவ்வளவு சரியாகப் படவில்லை; அண்ணா!’ என்றேன் தைரியமாக.

‘ஏனாம்'என்றார் மாமா, ஆத்திரத்துடன்.

‘உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை - இந்த அன்பு இருக்கிறதே அன்பு, அது நாம் எவ்வளவுக் கெவ்வளவு தூரம் விலகியிருக்கிறோமோ அவ்வளவுக் கவ்வளவு தூரம் இனிக்கிறது; எவ்வளவுக்கவ்வளவு தூரம் நெருங்கியிருக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு தூரம் கசக்கிறது - இல்லையா? ‘என்றேன் நான்.

+

அவ்வளவுதான்; ‘இதுதானா பேசுவாய், இதற்கு மேலேகூடப் பேசுவாய். எல்லாம் என்னால் வந்த வினை! அன்றே நான் உங்களை என் வீட்டுக்குள் நுழைய விடாமல் இருந்திருந்தால்? - இன்று நான் இந்த அவமானத்துக்கு உள்ளாக நேர்ந்திருக்குமா? இல்லை, உன்னால்தான் இப்படியெல்லாம் பேச முடிந்திருக்குமா?’ என்று பொரிந்துத் தள்ளிவிட்டு, கொஞ்சம் எட்டி நின்ற மாமியை, ‘வாடி இங்கே!’ என்று கையைப் பிடித்து இழுத்து வெளியே விட்டுவிட்டு, ‘நான் போகிறேன்; போனதும் உங்களுக்கும் சேர்த்து ஸ்நானம் செய்துவிடுகிறேன்!’ என்று தன் விஸ்வரூபத்தைக் காட்டிவிட்டு, ‘விடுவிடுவென்று நடையைக் கட்டிவிட்டார்.

‘ஒன்றும் இல்லாததற்கு இத்தனை கோபம் ஏன் இவனுக்கு? என்றாள் பாட்டி.