பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 விந்தன்

‘ஆண் பிள்ளையல்லவா, அப்படித்தான் கோபித்துக் கொள்வார்'என்றேன் நான்.

“என்னதான் ஆண்பிள்ளையாயிரு ந்தாலும் இப்படியா? எனக்கு ஒன்றும் புரியவில்லையே?'என்றான் அண்ணா.

‘புரியும்போது புரிகிறது; அதைப்பற்றி இப்போது என்ன?’ என்று நான் அவனிடம் சொல்லிவிட்டு, ‘சரி, நீங்கள்!'என்றேன் பாட்டியை நோக்கி,

“என்னையும் பெங்களுருக்கு அனுப்பிவைத்துவிடப் பார்க்கிறாயா, என்ன? - அதுதான் நடக்காது. உ னக்குக் கல்யாணம் ஆகும்வரை நான் இங்கிருந்து நகரமாட்டேன்’ என்று இருகால்களையும் நீட்டி உட்கார்ந்துவிட்டாள் அவள்!

<> <>

சென்னைக்கு வந்து சேர்ந்ததும் என் அண்ணா யாரைப் பார்த்தானோ என்னமோ, எப்படியோத் தனக்கென்று ஒரு வேலையைத் தேடிக்கொண்டு விட்டான் - என்ன வேலை என்கிறீர்களா, அவனுக்குப் பிடித்த உதவி ஆசிரியர் வேலைதான்!

ஆனால், அந்த வேலையில் சேருவதற்கு முன்னால் அவனுக்கு இருந்த உற்சாகம் பின்னால் இல்லை - ‘ஏன் இந்த மாற்றம்'என்று கேட்டதற்கு, அவன் சொன்னான்:

‘பத்திரிகைத் துறையில் புத்திசாலிகள் தேவைப்பட வில்லை; முட்டாள்கள்தான் தேவைப்படுகிறார்கள்.”

நான் சிரித்தேன்; ‘ஏன் சிரிக்கிறாய்? என்று கேட்டான் அவன்.

‘முட்டாளாயிருக்கக் கூடப் புத்திசாலித்தனம் தேவை என்று உனக்குத் தெரியவில்லையே, அண்ணா!’ என்றேன் நான்.