பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 111

‘உண்மை; நீ சொல்வது முற்றிலும் உண்மை - முட்டாளாயிருக்கக்கூடப் புத்திசாலித்தனம் தேவையாய்த் தான் இருக்கிறது! எங்களுடைய அலுவலகத்தைத்தான் எடுத்துக்கொள்ளேன்; என்னுடன் சேர்ந்து ஏழுபேர் அங்கே உதவி ஆசிரியர்களாக இருக்கிறோம் - ஆனால் வேலையோ இருவருக்குத்தான்’

‘பாக்கியுள்ள ‘பஞ்ச பாண்டவர்கள்’ என்ன செய்கிறார்கள்?”

‘அவர்களில் ஒருவர் ஆசிரியரை வளைய வளைய வந்து கொண்டிருப்பார் - அவர் சிரித்தால் இவரும் சிரிப்பார்; அவர் அழுதால் இவரும் அழுவார்; அவர் தும்மினால் இவரும் தும்முவார்; அவர் கனைத்தால் இவரும் கனைப்பார். இப்படியாகத்தானே அவருடைய காலம் கழிந்துகொண்டிருக்கிறது!”

‘மீதமுள்ள கட்டில் கால்கள்?”

‘பன்னிரண்டு மணிக்குவந்து அலுவலகத்தின் நாற்காலிகளை அலங்கரிக்கின்றன; ஒரு மணிவரை ஒசியில் கிடைக்கும் பத்திரிகைகளையெல்லாம் ஒரு புரட்டுப் புரட்டுகின்றன; ஒன்றரை மணிவரை ‘சிற்றுண்டி’ என்ற பேரால் ஒரு பேருண்டி - அதற்குப்பின் எதிர்த்தாற் போலிருக்கும் மேஜையின்மேல் இரு கால்களையும் துக்கிப்போட்டுக்கொண்டு, அப்படியே நாற்காலியின் மேல் சாய்ந்து விடுகின்றன!”

‘வேலை செய்த அலுப்புத்தீரவா?” ‘இல்லை, உண்ட களைப்புத்தீர!” “இவர்களை ஆசிரியர் கவனிப்பதில்லையா?”

“கவனித்து என்ன செய்ய? இவர்கள் எழுதுவதையோ மக்கள் விரும்பிப் படிப்பதில்லை; எனவே அவரே