உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 விந்தன்

இவர்களை ஒன்றும் எழுதவேண்டாம் என்று சொல்லிவிட்டார்!”

‘அதை அவர்கள் அவமானமாகக் கருதவில்லையா?” ‘ஊஹாம்; உடம்பில் ஏதாவது இருந்தால்தானே?சில சமயம் நான் விளையாட்டாக அவர்களைக் கிள்ளிக்கூடப் பார்ப்பதுண்டு - வலிப்பதில்லை!”

‘'அட, கடவுளே! எழுத்தாளனின் லட்சணம் இதுதானா? ‘மாதம் பிறந்தால் ஐந்நூறு, அறுநூறு என்று சம்பளம் வாங்கும் லட்சணத்தைத் தவிர வேறு என்ன லட்சணம் வேண்டும் ஒர் எழுத்தாளனுக்கு என்று அவர்கள் கேட்கிறார்கள்!”

“வேடிக்கையாக இருக்கிறதே, இது?” ‘இதைவிட வேடிக்கை இன்னொன்று இருக்கிறது!” ‘அது என்ன வேடிக்கை, அண்ணா?’ ‘மக்கள் விரும்பிப் படிக்கும் முறையில் எழுதும் வன்மை வாய்ந்த பேனா மன்னர்கள் சிலர் வெளியே இல்லையா?- அவர்கள் எழுதும் கதை, கட்டுரைகளைப் பிரசுரத்துக்கு ஏற்றதா, இல்லையா என்று தீர்மானிக்கும் பொறுப்பை ஆசிரியர் பெருமான் இந்தக் கட்டில் கால்களிடம் ஒப்படைத்திருக்கும் வேடிக்கைதான், அது!”

‘உண்மையாகவா?’ ‘அதிசயம்; ஆனால் உண்மை!’

‘சவரத் தொழிலாளி சஸ்திர சிகிச்சை செய்வது போலல்லவா இருக்கிறது இது?”

‘அந்தச் சிகிச்சைக்கும் உடன்பட வைக்கிறதே பேனா மன்னர்களில் சிலரைப் பீடித்துள்ள வறுமை, அதை நினைத்தால்தான் எனக்கு வருத்தமாயிருக்கிறது. அத்துடன்