பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 113

நீ சொன்னாயே, முட்டாளாயிருக்கக் கூடப் புத்திசாலித் தனம் தேவைப்படுகிறது என்று - அதுவும் சரியென்று தோன்று கிறது எனக்கு. இல்லாவிட்டால், எத்தனை வகையில் ஆசிரியர் எங்களை அவமதித்தாலும் சரி, அவராகவே என்றாவது ஒரு நாள் துணிந்து எங்கள் கழுத்தில் கைவைக்கா தவரை, நாங்கள் இருக்கும் இடத்தைவிட்டு நகர மாட்டோம்!’ என்ற பிடிவாதத்துடன் அந்தக் கட்டில் கால்கள் அங்கு உட்கார்ந்திருக்குமா?”

‘என்னமோ, அவற்றில் ஒன்றாக நீயும் ஆகிவிடாம லிருந்தால் சரி'என்றேன் நான்.

‘அந்த நிலை வரும்போது நான் நிச்சயம் அங்கே இருக்கமாட்டேன் - இது உறுதி என்றான் அண்ணா.

இந்தச் சமயத்தில் தெருக்கதவை யாரோ'தடதட’ வென்று இடிக்கும் சத்தம் கேட்கவே, ‘யார் அது'என்று கேட்டுக்கொண்டே அண்ணாவிரைந்தான்.

வந்திருப்பவர் யாராயிருக்குமோ, என்னமோ என்று நான் உள்ளே சென்றேன்.

கதவு திறக்கும் சத்தம் என் காதில் விழுந்தது. அதைத் தொடர்ந்து, ‘நம்பி என்பவர் நீர்தானா?” என்று வந்தவர் உறுமும் சத்தமும் எனக்குக் கேட்டது.

“ஆம், நான்தான்!"என்றான் அண்ணா, அமைதியாக,

‘என்னுடைய நூலுக்கு மதிப்புரை எழுதியவர் நீர் தானே?” r

“எத்தனையோ நூல்களுக்கு எழுதுகிறேன்; அவற்றில் எந்த நூல் உங்களுடைய நூல் என்றுத் தெரியவில்லையே, எனக்கு!”

‘சகோதரிக்கு என்று நான் எழுதிய அறிவியல் நூலுக்கு நீர்தானே மதிப்புரை எழுதினர்?”

1b. idtr - 8