பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 விந்தன்

‘ஆம்; அதன் ஆசிரியர் பெருமான் நீங்கள்தானோ?” நானேதான்! ‘வாருங்கள்; வந்து அமருங்கள்!’

அண்ணாவின் அழைப்பை ஏற்றுக்கொண்டு உள்ளே வந்தவர், நாற்காலியைத் தாமே டர்ரென்று இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தார்.

‘அப்பா என்ன உஷ்ணம், என்ன உஷ்ணம்!’ என்று சொல்லிக்கொண்டே, என் அண்ணாவும் அவருக்கு எதிர்த்தாற்போல் உட்கார்ந்தான்.

வந்தவர் முறைத்தார்: ‘உங்களைச் சொல்லவில்லை! வெளியே காயும் வெய்யிலைச் சொல்கிறேன்!” என்று சொல்லிக்கொண்டே அண்ணா விசிறியை எடுத்து அவரிடம் நீட்டியபடி, ‘அம்மா, நறுமணம் ஐயாவுக்குக் கொஞ்சம் குளிர்ந்த நீர் இருந்தால் கொண்டுவந்து கொடுக்கிறாயா?” என்றான் வினயத்துடன்.

‘எனக்கு விசிறியும் வேண்டாம்; உங்கள் வீட்டுக் குளிர்ந்த நீரும் வேண்டாம் - இப்படித்தான் மதிப்புரை எழுதுவதா? இல்லை, கேட்கிறேன்; இதற்குத்தானா பெயர், மதிப்புரை என்று? எனக் கேட்டுக்கொண்டே, தம் கோட்டுப் பைக்குள் திணித்து வைத்திருந்த ஏதோ ஒரு பத்திரிகையைப் பிடுங்கி எனக் அண்ணாவுக்கு முன்னால் விட்டெறிந்தார் அவர்.

‘அப்படி என்ன எழுதிவிட்டேன், இதில்?’ என்று பதிலுக்குக் கேட்டுக்கொண்டே, அண்ணா அந்தப் பத்திரிகையை எடுத்துப் பிரித்தான்.

‘அதற்குள் மறந்துவிட்டீரா? - இப்படிக் கொடும் என்ன எழுதியிருக்கிறீர் என்று நானே உமக்குப் படித்துக்