பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 115

காட்டுகிறேன்!’ என்று அவன் கையிலிருந்த பத்திரிகையைப் பிடுங்கி அவரே வாசித்தார்.

“தமிழர்கள் அறிவில் சிறந்தவர்கள் என்று ஒரு பக்கம் சொல்கிறார்கள்; இன்னொரு பக்கம் தமிழில் பெருகி வரும் அறிவியல் நூல்களை அவர்கள் தட்டாமல் வாங்கிப் படித்துக் கொண்டே இருக்கிறார்கள். இதைப்பார்க்கும் போது தங்களுக்குள்ள அறிவில்கூடத் தமிழர்களுக்கு ஐயம் தோன்றிவிட்டதோ என்று நமக்கு ஐயுறத் தோன்றுகிறது!

இப்படிச் சொல்லும்போது தமிழில் அறிவியல் நூல்களே வரக்கூடாது என்று சொல்லவில்லை. வரவேண்டும்; நிறைய வரவேண்டும். ஆனால் எத்தகைய அறிவியல் நூல்கள் தமிழில் வரவேண்டும்? சகோதரிக்கு, சகோதரனுக்கு, அப்பாவுக்கு, அம்மாவுக்கு, ஆட்டுக் குட்டிக்கு, பூனைக்குட்டிக்கு என்பது போன்ற மனித வாழ்வு பற்றிய அறிவியல் நூல்களா? அவற்றுக்கா தமிழில் பஞ்சம்,தமிழ்நாட்டில் பஞ்சம்? அவைதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழில் வேண்டிய மட்டும் வந்துவிட்டனவே! உதாரணத்துக்குச் சொல்லப்போனால் ‘திருக்குறள் ஒன்று போதாதா, வாழ்வுபற்றிய அறிவியலுக்கு? - போதும் என்றே நாம் நினைக்கிறோம்.

எனவே, தமிழில் அறிவியில் நூல்கள் வரவேண்டு மானால் பெளதிகத்தில் வரட்டும்; ரசாயனத்தில் வரட்டும்; விஞ்ஞானத்தில் வரட்டும் - வரவேற்கிறோம்; வாழ்த்து கிறோம் அவற்றுக்குப் பதிலாக அறிவியல் நூல் என்ற பேரால் வரும் இதுபோன்ற அதிகப் பிரசங்கித்தனமான நூல்களை நாம் வரவேற்பதற்குமில்லை; வாழ்த்துவதற்கு மில்லை!

ஏனெனில், அறிவு என்பது மனிதனுக்கு மட்டுமல்ல;

இந்த உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளுக்குமே உண்டு. ஆகவே, அவரவர்களுக்கு உரிய அறிவைக் கொண்டு