பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 117

இந்தப் பகுதியை இரைந்து படித்துவிட்டு, ‘இப்போ தாவது தெரிந்ததா, நீர் என்னைப் பற்றியும் என்னுடைய நூலைப் பற்றியும் என்ன எழுதியிருக்கிறீர் என்று கேட்டார் அவர்.

‘இது சுதந்திர யுகம் - இந்த யுகத்தில் எதைப்பற்றியும் யாரைப் பற்றியும் என்னுடைய சொந்தக் கருத்தை வெளியிட எனக்குச் சுதந்திரமுண்டு; அந்தச் சுதந்திரத்தைத்தான் நீங்கள் இதில் காண்கிறீர்கள் - வேறொன்றுமில்லை!” என்றான் அண்ணா.

‘நீரும் உம்முடைய சுதந்திரமும் நாசமாய்ப் போகட்டும்’ என்று தம் கையிலிருந்த பத்திரிகையைக் கிழித்து எறிந்துவிட்டு எழுந்த அவர், கதவுக்குப் பின்னால் நின்று தலையை நீட்டியபடி இருந்த என்னைக் கண்டதும், ‘நீயா!’ என்று வாயெல்லாம் பல்லாக இளித்தார்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்து வீழ்த்த உங்களால் முடியுமா? முடியுமென்றால், உங்களாலும் எல்லார்க்கும் நல்லவராக வாழமுடியும்.

உதாரணமாக, ஒருவன் திருடுகிறான்; இன்னொருவன் திருடப்படுகிறான். இவர்கள் இருவரையும் பற்றி ‘எல்லார்க்கும் நல்லவராக வாழ விரும்புபவர் என்ன சொல்கிறார்?- திருடுவது திருடுபவனின் குற்றமல்ல; அவனைத் திருடக்கூடிய நிலையில் வைத்திருக்கும் அரசாங்கத்தின் குற்றம் என்கிறார்; இதனால் திருடனின் ஆதரவு அவருக்குக் கிடைக்கிறது. அடுத்தாற்போல் திருடப் படுபவனைப் பற்றி அவர் என்ன சொல்கிறார்? - ‘அரசாங்கத்தின் கையாலாகாத்தனம் இது; அது திருடு பவனிடமிருந்து திருடப்படுபவனைக் காக்கத் தவறி விட்டது என்கிறார். இதனால் திருடப்படுபவனின் ஆதரவும் அவருக்குக் கிடைக்கிறது. - இந்த ஆதரவைக் கொண்டு ஒற்றைக்கு இரட்டையாக ஆதாயம் அடைபவர்