பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 விந்தன்

யார் என்கிறீர்கள் - திருடனா, திருடப்படுபவனா? இருவரும் இல்லை; எல்லார்க்கும் நல்லவர்தான்!

இத்தகைய நல்லவர்களில் ஒருவராக விளங்கி வந்த அந்த வல்ல வரை - அதாவது அந்தப் பேராசிரியரை - என்னுடைய பேதைப் பருவத்தில் எனக்குப் பிடித்திருந்தது. புற்றிலிருந்து ஈசல் கிளம்புவது போல் கிளம்பிக் கொண்டிருந்த அவருடைய நூல்கள் அனைத்தையும் நான் ஒன்று விடாமல் வாங்கிப் படிப்பேன். அவற்றில் காணும் அவருடைய தத்துவங்கள் அனைத்தும் எனக்குத் தண்ணிர் பட்டபாடு பழி எதுவாயிருந்தாலும் அதைப் பிறருடைய தலையிலே சுமத்தி விட்டுத்தான்தப்பித்துக்கொள்ளும் அந்த அற்புதமான தத்துவத்தைத்தான் அவர் எத்தனை கோணங்களில் நின்று, எத்தனை புத்தகங்களில் அலசுகிறார். அவையனைத்திலும் இலை மறை காய் போலிருக்கும் அந்தத் தன்னலத்தின் அழகுதான் என்னே, என்னே! இப்படி யெல்லாம் எண்ணி நான் அந்த நாளில் வியப்பதுண்டு. அந்த வியப்பிற் குரிய நூலாசிரியரை என்றாவது ஒரு நாள் நேருக்கு நேராகச் சந்திக்க மாட்டோமா என்று நான் ஏங்கிக் கொண்டிருந்த அந்தக் காலத்தில் தான் அவர் நந்தி மலைக்கு வந்திருந்தார். கோடை விடுமுறையைக் கழிப்பதற்காக - இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடுவேனா, நான்? உடனே ஒடினேன், ‘ஆட்டோகிராப்புடன்!

ஆனால்...

அங்கே நான் கண்ட காட்சியோ என்னைத் திடுக்கிட வைப்பதாயிருந்தது. காரணம் என் அன்புக்குகந்த பேராசிரியர் அங்கே உமர்கய்யமாக மாறி, மதுவும் மங்கையுமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்ததுதான்

இது என்ன வேடிக்கை ஊருக்கெல்லாம்

ஒழுக்கத்தைப் பற்றி உபதேசிக்கும் இவரா இப்படி யிருக்கிறார்?