பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 விந்தன்

‘நீ மட்டும் என்னவாம்? என்னைப் போல் நீயும் ஒரு தமிழ்ப் பேராசிரியைதானே?” என்று அவள் கன்னத்தில் செல்லமாகத் தட்டினார் அவர்.

‘இருந்தாலும் வேட்டி. சட்டையை வெறுத்து நீங்கள் ‘சூட் போட்டுக் கொண்டதுபோல் புடவை ரவிக்கைளை வெறுத்து நான் ‘கெளின் போட்டுக்கொள்ள வில்லையே?’ என்றாள் அவள்.

‘அதனாலென்ன, இப்பொழுது நீ கெளன்'போட்டுக் கொண்டு இருப்பதுபோல்தான் இருக்கிறது!’ என்றார் அவர், அவளை ஊடுருவிப் பார்த்துக்கொண்டே.

அப்பொழுதுதான் தன்னுடைய நிலையை உணர்ந்த அவள், ‘ஒ, இதைச் சொல்கிறீர்களா!’ என்று சிரித்துக் கொண்டே மேலாடையை இழுத்து மேலே போட்டாள்.

அவ்வளவுதான். மறுபடியும் பாட ஆரம்பித்து விட்டார் அவர்.

‘தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! -பெண்கள்

திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல் வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் - இந்த

மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய் வல்லி யிடையினையும் மார் பிரண்டையும் - துணி

மறைத்ததனா லழகு மறைந்த தில்லை, சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை- முகச்

சோதி மறைத்துமொரு காதலிங்குண்டோ?” இதைக் கேட்டதும் அவள் சொன்னாள்: ‘சென்னையில் ஒரே திருப்புகழ் பஜனையென்றால் பெங்களுரில் ஒரே பாரதி பஜனையாயிருக்கிறதே?”

‘ஆளுக்குத் தக்க பேச்சு: ஊருக்குத் தக்க வேடம் - இதுவே வெற்றியின் ரகசியம்! என்றார் அவர் பெருமையுடன்.