பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 121

‘அந்த ரகசியத்தை இவ்வளவு பகிரங்கமாகச் சொல்லலாமா?’ என்றாள் அவள், ரகசியமாக.

‘உன்னிடம்தானே சொல்கிறேன்? நீதான் என்னுடைய ரகசியத்தின் ரகசியமாயிற்றே என்றார் அவர்.

அவள் சிரித்தாள்; அவரும் சிரித்தார் - அவர்கள் இரு வரையும் பார்த்து நானும் சிரித்தேன், தமிழ்ப் பண்பைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை அந்தத் தர்மாத்மாக்கள் ஏற்றுக் கொண்டிருப்பதற்காக!

நான் சிரித்ததை அவர்கள் கவனித்தார்களோ என்னமோ, அது எனக்குத் தெரியாது - அவள் சொன்னாள்.

‘நம்மைப் பார்த்துச் சிலர் சிரிக்கலாம் - ஆனால் அப்படிச் சிரிப்பவர்கள் அழவேண்டியதுதான்; தங்கள் வாழ்நாள் முழுவதும் அழவேண்டியதுதான்’

இதைக் கேட்டதும் தூக்கிவாரிப்போட்டது எனக்கு; எதற்கும் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று எண்ணிக் கொஞ்சம் பின்வாங்கி நின்றேன் - அவர் சொன்னார்.

‘அவர்களைப் பற்றி நீ கவலைப்படாதே! அவர்கள் வாழப்பிறந்தவர்களல்ல: சாகப் பிறந்தவர்கள்!”

‘அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது - பண்பு, பண்பு என்று பீற்றிக்கொண்டு திரியும் சில பைத்தியங்களைப் பார்த்தால்!” என்றாள் அவள்.

‘பாவம்! அவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? உயிரோடிருக்கும்போதே தங்களைச் சுற்றித்தாங்களே சமாதி எழுப்பிக் கொள்கிறார்கள்; அந்தச் சமாதிக்குப் ‘பண்பு என்று பெயரும் வைத்துக் கொள்கிறார்கள்!’ என்றார் அவர்.

‘அந்தப் பண்பு என்ற பேரால் எத்தனை விலங்குகள் பூட்டப்பட்டன, எனக்கு அத்தனையையும் உடைத்தெறி