பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 விந்தன்

வதற்குள் - அப்பப்பா, நான் பட்டபாடு- கொஞ்சமா, நஞ்சமா?"என்று நெட்டுயிர்த்தாள் அவள்.

அதுதான் சமயமென்று, “ஞாபகமிருக்கட்டும் - அவற்றை நீ உடைத்தெறியவில்லை; நான்தான் உடைத் தெறிந்தேன்’ என்று அவர் அவளை உசுப்பினார்.

“ஆமாம், என்னைக் கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றி!’ என்று அவள் அவரிடம் பசப்பினாள்

அவ்வளவுதான்:

‘காரியமில்லையடி வீண் பசப்பிலே - கனி

கண்டவன் தோலுரிக்கக் காத்திருப்பானோ?” என்று பாடிக்கொண்டே, கையை நீட்டிவிட்டார் அவர்!

‘நில்லுங்கள்; அதற்கு இப்போதே நீங்கள் என்னைத் துகிலுரிய ஆரம்பித்துவிடவேண்டாம்!"என்று சொல்லிக் கொண்டே அவள் எழுந்தாள்.

‘'வேண்டாம் என்று உன்னைப்போன்ற பெண்கள் சொன்னால், அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? - வேண்டும்’ என்றுதான் அர்த்தம்'என்றார் அவர் விஷமச் சிரிப்புடன்.

‘பொல்லாதவர் நீங்கள்!'என்றாள் அவளும் விஷமச் சிரிப்புடன்.

‘இதென்ன வம்பு? இந்த நேரத்தில் நாம் ஏன் இங்கே வந்து தொலைத்தோம்? என்று எண்ணி வெட்கியவளாய், இன்னும் கொஞ்சம் பின்வாங்கி நின்றேன் நான்.

“ஆமாம், பாரதி என்றால் உங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காதே - அவனுடைய பாடல்களை மட்டும் ஏன் அடிக்கடி பாடுகிறீர்கள்?'என்று கேட்டாள், அவள்.