பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 127

‘அப்படியானால் சரி; எங்கே உன்னுடைய ஆட்டோ கிராப் நோட் என்று கேட்டுக்கொண்டே அவர் பேனாவை எடுத்தார்.

அதுதான் முக்தியடைந்து விட்டதே, இனிமேல் மறுபிறவி எடுத்தால்தான் உண்டு!"என்றார் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த அந்தப் பேர்வழி.

எனக்கு ஒரே வெட்கமாகப் போய்விட்டது; “நாளை ‘ஆட்டோகிராப்புடன் வந்து சந்திக்கிறேன்!” என்று சொல்லிவிட்டு எடுத்தேன் ஒட்டம்!

ஆனால்...

உண்மையில் ஏமாந்தது யார் தெரியுமா? அதை ஏன் கேட்கிறீர்கள், போங்கள்!

<> > <>

மறுநாள் மாலை வேறொரு ஆட்டோகிராப் நோட்டுடன் நான் நந்திமலைக்குச் சென்றபோது, முதல் நாள் சந்தித்த பேராசிரியரை அங்கேக் காணோம் - பேராசிரியர் என்றால் மதுவும் மங்கையுமாகக் காட்சியளித்த அந்த ‘உமர்கய்யாம் பேராசிரியரை இங்கே நான் குறிப்பிட வில்லை; அவரால் எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இன்னொரு பேராசிரியரைக் குறிப்பிடுகிறேன்- அவரைக் காணாமல் நான் அங்கே விழித்துக்கொண்டு நின்றபோது, ‘பெண்ணே!"என்று எனக்குப் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது. அந்தக் குரலிலிருந்தே அவ்வளவு பரிவுடன் என்னை அழைப்பவர் யாராயிருக்கும் என்பதைப் புரிந்துகொண்டு, ‘என்ன, ஆணே!’ என்று நான் எரிச்சலுடன் திரும்பினேன்- தமிழாசிரியை சகிதம் எனக்குப் பின்னால் நின்றுக் கொண்டிருந்த தமிழாசிரியர், ‘பண்புக்குறைவாகப் பேசுகிறாய் பெண்ணே,