பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

w

மனிதன் மாறவில்லை 131

தோடு மட்டுமில்லை; மேஜையின் மேல் முகத்தை வேறு புதைத்துக்கொண்டு விக்கிவிக்கி அழுதார்.ஒன்றும் புரிய வில்லை எனக்கு: “என்ன அண்ணா, இவருக்கு?’ என்று கேட்டுக் கொண்டே, அடுக்களையை விட்டு கூடத்துக்கு வந்தேன். ‘அதுதானே எனக்கும் புரியவில்லை!"என்றான்

. (

“என்னாலேயே என்னைப் புரிந்து கொள்ள முடியாம லிருக்கும்போது, உங்களால் என்னை எப்படிப் புரிந்து கொள்ளமுடியும்?’ என்றார் அவர், விக்கலுக்கும் விம்மலுக்கும் இடையே."என்னதான் இருந்தாலும் ஒரு டாக்டர், ஒரு பேராசிரியர், ஒரு நூலாசிரியர் இப்படியா

அழுவது? எழுந்திருங்கள்; எழுந்து நன்றாக

உட்காருங்கள்!'என்று அண்ணா அவருடைய தோளைப் பற்றினான்.

‘இருக்கலாம் - நீங்கள் சொல்வதுபோல் நான் ஒரு டாக்டராயிருக்கலாம்; நான் ஒரு பேராசிரியரா யிருக்கலாம்; நான் நூலாசிரியராயிருக்கலாம் - ஆனால் நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்; ஆசாபாசங்களுக்கு இரையாகும் அற்பமனிதன் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது; மறந்து தேவனைப் பார்க்கும் தண்களால் என்னைப் பார்க்கக் கூடாது"என்றார் அவர், சற்றே தலைதுக்கி, ‘இல்லை; என்னைப் பொறுத்தவரை நான் எப்போதுமே யாரையும் அப்படிப் பார்ப்பதில்லை’ என்றான் அண்ணா.

‘அப்படி நீங்கள் பார்க்காமலிருப்பதாயிருந்தால் என்னுடையக் கதையை நான் உங்களிடம் சொல்லமுடியும்; அதன் மூலம் என்னுடைய மனச்சுமையும் என்னால் ஒரளவு குறைத்துக்கொள்ளமுடியும்'என்றார் அவர்.