உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 வித்தன்

‘சொல்லுங்கள், நீங்களும் என்னைப் போன்ற ஒரு மனிதர்தான் என்ற உணர்வுடனேயே நான் அதைக் கேட்கிறேன்” என்றான் அண்ணா.

அவர் சொன்னார்.

<> <> <>

‘சொன்னால் நம்பவே மாட்டீர்கள் - ஆம் சொன்னால் நம்பவே மாட்டீர்கள். பட்டம், பதவி, புகழ் - எல்லாமே பெற்றுவிட்ட எனக்கு, ஒரு பெண்ணின் இதயத்தில் மட்டும் இதுவரை இடம் கிடைக்கவில்லை. ‘யார் அந்தப் பெண்?’ என்று கேட்கிறீர்களா? அவளை எனக்குத் தெரியாது! அவளையே தெரியாமல் இருக்கும் போது அவளுடைய இதயத்தில் உங்களுக்கு எப்படி இடம் கிடைக்கும்’ என்கிறீர்களா? அதுவும் எனக்குத் தெரியாது ஐயா, அதுவும் எனக்கு நிச்சயமாகத் தெரியாது!”

இந்த சமயத்தில் என்னையும் மீறி நான் கேட்டேன். ‘பெங்களுரில் நான் உங்களுடன் ஒரு பெண்ணைப் பார்த்தேனே, அந்தப் பெண் யார்?”

அவர் சொன்னார். -

‘அவளா, அவள் ஒரு கொலைகாரி’

‘கொலைகாரியா?” -

“ஆம், எனக்காகத் தன் கணவனையேக் கொன்று விட்ட க் கொலைகாரி அவள்!”

‘அட பாவமே’

‘அந்த வெட்கக் கேட்டை ஏன் கேட்கிறீர்கள்?. தனக்குப் பிறந்த நாள் என்பதற்காக அவள் ஒரு நாள் என்னைத் தன் வீட்டுக்கு அழைத்திருந்தாள். சக ஆசிரியை என்பதற்காக நானும் போயிருந்தேன். அங்கே தன்