பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 135

வற்றையுமே நான் இழக்க வேண்டியிருக்கும். இழந்து ஏதும் அறியாத ஊராரின் பேச்சுக்கும் ஏச்சுக்கும் நான் ஆளாக வேண்டியிருக்கும். இந்த நிலையில் வேண்டா வெறுப்புடன் அவளுடையக் காதலை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியொன்றும் தோன்ற வில்லை, எனக்கு ஏற்றுக்கொண்டேன்; என்னுடைய புகழுக்கு வேண்டாம் இழுக்கு என்பதற்காக அவளுடைய காதலை நான் ஏற்றுக் கொண்டேன்.

அல்வளவுதான்; ‘எனக்குப் பிறந்த நாள் பரிசாக என்னக் கொண்டு வந்திருக்கிறீர்கள்? “ என்று கேட்டுக் கொண்டே அவள் என்னை நெருங்கினாள். என்னால் எழுதப்பட்ட சகோதரிக்கு என்ற புத்தகத்தை எடுத்து நான் அவளிடம் நீட்டினேன். ‘யாருக்கு வேண்டும், இந்தப் புத்தகம்?’ என்று அதைப் பிடுங்கி வீசி எறிந்துவிட்டுத் தன் இதழ்களைக் குவித்து அவள் என் முகத்துக்கு முன்னால் நீட்டினாள். அட கடவுளே, கணவன் பிணமாகக் கிடக்கும் போது கண்ணகிக்கு முத்தம் வேண்டுமாமே, முத்தம்!” என்று நினைத்த நான் ‘முதலில் இவரை அடக்கம் செய்வோம்; பிறகு எல்லாவற்றையும் வைத்துக் கொள்வோம்!’ என்றேன். ‘ஊஹாம்; இதுதான் முதலில்’ என்றாள் அந்தக் கிராதகி; இது தமிழ்ப் பண்பல்ல; ஆங்கிலப் பண்புமல்ல!"என்று நான் மேலும் சொல்லிப் பார்த்தேன்.

‘அதெல்லாம் உங்கள் எழுத்தில் இருக்கட்டும்; வாழ்க்கையில் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் அவள் - வேறு வழி? - அவள் விரும்பிய ‘பிறந்த நாள் பரிசை அவளுக்குக் கொடுத்ததோடு, அவளுடைய கணவனின் பிணத்தையும் எடுத்து அடக்கம் செய்தேன். அதற்குப் பிறகு என் மனம் ஒரு நிலையில் இல்லை. அடிக்கடி தடுமாறுவதும் தடுக்கி விழுவதுமாக இருந்தது. ஆட்சியாளரின் தண்டனையிலிருந்து தப்பினாலும்,