பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 11

கடவுளே! அப்படிப்பட்ட புண்ணிய புருஷரா தனக்கு மாலையிட்ட மணாளராக இருக்கப் போகிறார்?

இருக்காது; இருக்கவே இருக்காது. முதல் இரவின் போது அவர் நடந்து கொண்ட விதம்; பேசிய அசட்டுப் பேச்சு ஊஹாம் இருக்காது; இருக்கவே இருக்காது.

இப்படி நினைத்ததும் அவளுடைய இதழ்க்கடையில் ஒரு புன்னகை நெளிந்து மறைந்தது; திரும்பினாள்.

ஆம், அவரை எழுப்பி விஷயத்தை உடனே தெரிவித்து விடவேண்டும்... :

என்ன இது? தனக்கு அந்த வேலையை வைக்காமல் அவரே எழுந்துவிட்டிருக்கிறாரே?

எழுந்தால் எழுந்திருக்கட்டும் வேலைக்காரி விசாலத்தை உள்ளே வரவிடாமல் தடுத்து நிறுத்தி, அவளுடன் அவர் என்ன பேசுகிறார்? அவள் காதோடு காதாக என்ன சொல்கிறார்? இவருடைய கையிலிருந்த பத்து ரூபாய் நோட்டொன்று அவளுடைய கைக்கு மாறுகிறதே! ஏன் எதற்காக?

இவள் இவ்வாறு குழம்பிக் கொண்டிருந்தபோது, ‘அப்பப்பா ஒரு கை சாணம் எடுத்துக் கொண்டு வந்து தெருவில் தெளித்துவிட்டு வரலாமென்று போனால், ‘கத்து, கத்து’ என்று கத்தித் தொலைக்கிறானே’ என்று அலுத்தபடி வந்து, அந்தக் குழந்தையைத் தூக்கித் தன் தோளின் மேல் கிடத்திக் கொள்ளப் போனாள் விசாலம்.

அப்போது...

அந்தக் குழந்தையின் அண்ணாக்கயிற்றில் மடித்துச் செருகி வைக்கப்பட்டிருந்த ஒரு கடிதம் நழுவிக் கீழே விழுந்தது. சட்டென்று குனிந்து அதை எடுத்துத் தன்