பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 137

‘அப்படியானால் இனிமேல்தான் நீங்கள் வாழ வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான் அண்ணா.

“ஆம், இனிமேல்தான் நான் வாழவேண்டும்; இனி மேல்தான் நான்வாழவேண்டும்’ என்றார் அவர்.

<> > > பேராசிரியர் சொன்ன கதை எங்கள் நெஞ்சை நெகிழ வைத்துவிட்டது. “இப்படியும் ஒரு பெண் தமிழ்நாட்டில் இருப்பாளா, என்ன? ‘ என்று கேட்டேன் நான் வியப்புடன்.

“இருப்பாள், இருப்பாள் இப்போதெல்லாம் தமிழ்நாடு எங்கே தமிழ்நாடாயிருக்கிறது? தமிழன் தான் எங்கே தமிழனாயிருக்கிறான்? எல்லாம் ஒரே கலப்படம்; அசல் எதுபோலி எது என்பதைக்கூட அவ்வளவு எளிதில் கண்டு பிடிக்கமுடியவில்லை!” என்றான் அண்ணா.

அதற்குள் தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்ட பேராசிரியர், ‘எல்லாம் வடமொழியால் வந்த வினை, எல்லாம் வடமொழியால் வந்த வினை!’ என்று சொல்லிக்கொண்டே எழுந்தார்.

‘ஆங்கிலமும் அதற்கு விதிவிலக்கல்ல!’ என்றான் e3Nosgossi.

ஆம், அது அறிவையும் வளர்த்திருக்கிறது; அசட்டுத் தனத்தையும் வளர்த்திருக்கிறது!” என்றேன் நான்.

‘அதற்குநானே சான்று என்றார் பேராசிரியர். ‘நீங்களா!’ “ஆம், உள்ளத்தால் தமிழனாயிருந்தாலும் உடையால் ஆங்கிலேயனாக இல்லையா நான்?’ என்றார் அவர் சிரித்துக்கொண்டே. ‘தேவலையே. உங்களை நீங்களே பார்த்துசிரித்துக் கொள்கிறீர்களே?’ என்றேன் நான்.