138 விந்தன்
‘பிறரைப் பார்த்துச் சிரிப்பதைவிடத் தன்னைப் பார்த்துத்தானே சிரித்துக் கொள்வதுதான் நல்லது!'என்றான் அண்ணா. -
‘நான் வருகிறேன்; என்னுடைய கதையைக் கேட்ட பிறகும் என்னை நீங்கள் வெறுத்து ஒதுக்காமலிருந்ததற்காக என் நன்றி!” என்று கிளம்பினார் பேராசிரியர்.
‘காரணம் எதுவாயிருந்தாலும் ஒருவரை ஒருவர் ஏன் வெறுத்து ஒதுக்கவேண்டும்? மனிதன் அப்படியொன்றும் சக்தி வாய்ந்தவனில்லையே! பலiனனான அவனிடம் எத்தனையோ பலவீனங்கள் இருக்கத்தான் செய்யும்; ஆனால் பண்பு’ என்னும் பேரால் அவற்றை மூடி மறைக்க முயல்வதுதான் எனக்குப் பிடிக்கவில்லை!’ என்றான் அண்ணா.
“ஆம், அது பிறரை ஏமாற்ற ஏதுவாகி விடுகிறது!” என்றேன் நான்.
‘இதிலிருந்து, இன்று தொடங்கியுள்ள நம் நட்பு என்றுமே கருத்துக்கு அப்பாற்பட்டதாயிருக்கும் என்று நான் எதிர்பார்க்கலாமா?” என்று கேட்டார் பேராசிரியர்.
“தாராளமாக!'என்றான் அண்ணா.
‘மகிழ்ச்சி; இப்போதைக்கு நான் விடைபெற்றுக் கொள்கிறேன்!” என்று விரிவுரையாளர் கிளம்பினார்.
“கொஞ்சம் பொறுங்கள்; சண்டையில் ஆரம்பித்த நட்பு காபியில் வளரட்டும்!” என்று நான் உள்ளே சென்றேன்.
‘நீர் மோரிலேயே வளரலாமே!” என்றார் அவர். ‘ஒ. அதை நான் மறந்துவிட்டேன்!’ என்று நான் அவருடைய விருப்பப்படி அவருக்கு முன்னால் நீர்மோரைக் கொண்டுவந்து வைத்தேன்.