பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 139

அதை எடுத்துப் பருகிய பேராசிரியர், ‘நீ எப்படியோ அப்படியே நீர்மோரும்'என்றார் சிரித்துக்கொண்டே.

‘நானும் மோசம், நான் கொண்டுவந்த நீர்மோரும் மோசம் என்கிறீர்களா என்ன? ‘ என்றேன் நானும் சிரித்துக்கொண்டே.

‘அவர் சொன்னதை நேர் விரோதமாக எடுத்துக் கொண்டு விட்டாயே?"என்றான் அண்ணா.

<> <> <>

அன்றிலிருந்து ஏதாவது ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த அவர், சில நாட்களுக்கெல்லாம் காரணம் எதுவுமே இல்லாமலிருந்துங்கூட வர ஆரம்பித்துவிட்டார்:

நானோ, முதலில் ‘ஏன் வருகிறார்?’ என்று நினைத்தேன்; பிறகு, ஏன் வரவில்லை?” என்று நினைக்க ஆரம்பித்து விட்டேன்.

இந்த நிலையை ஒருவாறு புரிந்துக்கொண்ட அண்ணா, “காதலுக்கு எதுவுமே குறுக்கே நிற்காது போலிருக்கிறது! என்றான் ஒரு நாள், ஏதோ பேச்சோடு பேச்சாக.

‘எதைச் சொல்கிறாய், நீ?"என்றேன் நான், எல்லாம் புரிந்தும் ஏதும் புரியாதவள் போல.

“பேராசிரியரின் வயதை!’ என்றான் அவன், என் காதோடு காதாக.

‘'நல்லவேளை, நீதான் குறுக்கே நிற்கிறாயோ என்னமோ என்று பயந்தே போனேன்!'என்று உள்ளூற நினைத்த நான் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், ‘போ, அண்ணா இந்த மாதிரியெல்லாம் நீ என்னுடன் இன்னொரு முறை பேசினால் நான் கோபித்துக் கொள்வேன்!"என்று அவனை மிரட்டினேன்.