பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 விந்தன்

‘புத்தி:புத்தி பேசவில்லை; இன்னொருமுறை நான் உன்னுடன் அந்த மாதிரியெல்லாம் பேசவேயில்லை!” என்று கன்னத்தில் போட்டுக்கொண்டான் அவன்.

அவ்வளவுதான்; என்னையும் அறியாமல் நான் சிரித்துவிட்டேன்.

அத்துடனாவது அவன் என்னை விட்டானா? அதுதான் இல்லை; மெல்ல என்அருகே வந்து, ‘நானும் சிரிக்கலாமா? என்றான்.

எப்படியிருக்கும், எனக்கு? ‘சிரித்தால் சிரி; அழுதால் அழு! எனக்கென்ன வந்தது? என்று வெடுக் கென்று சொல்லிவிட்டு, உள்ளே போய்விட்டேன்.

என் தலை மறைந்ததும், ‘'நானும் அந்தக் கூத்தைப் பார்த்துக் கொண்டுதாண்டாப்பா, வருகிறேன்!"என்றாள் பாட்டி. -

‘உனக்கும் தெரியுமர், அது?'என்றான் அண்ணா. ‘ஏன் தெரியாது, நானும் ஒரு காலத்தில் குமரியாயிருந்தவள்தானே?’ என்று சுருங்கச் சொல்லி விளங்க வைத்தாள் அவள்.

‘சரி. நீ என்ன நினைக்கிறாய் அதைப்பற்றி? என்று கேட்டான் அவன்.

‘'நான் என்ன நினைக்கிறேன்? கல்யாணத்துக்கு முன்னால் ஒர் ஆணும் பெண்ணும் இவ்வளவு தூரம் நெருங்கிப் பழகுவது அவ்வளவு நல்லதல்லவே என்று தான் நினைக்கிறேன்!”

‘அதெல்லாம் பத்தாம் பசலித்தனம்|விடு அதை;

விஷயத்துக்கு வா. நறுமணத்துக்கு அவரைப்பிடித்துப் போய்விட்டதென்று நான் நினைக்கிறேன் - அப்புறம்