பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 விந்தன்

பாவி அவனைக் கொல்லவே கொல்லப் போகிறேன், ஒரேயடியாகவாவது கொல்லப் போகிறேனா? அதுவும் இல்லை; அணுவணுவாகக் கொல்லப் போகிறேன்!

இதை நினைத்ததும், அண்ணா என்று அலறிக் கொண்டே அவனுடைய காலில் விழுந்துவிட வேண்டும் போல் எனக்குத் தோன்றிற்று. ஆனால் விழவில்லை - விழுந்து எதிர்பாராத அதிர்ச்சியால் அவ்வளவு சீக்கிரம் அவனுடைய இதயத்துடிப்பை நிறுத்திவிட நான் விரும்ப வில்லை!

கண்ணகி அவருக்காகத் தன் கணவனைக் கொன்றாள்; நறுமணம் - அவருக்காகத் தன் அண்ணனைக் கொல்ல வேண்டுமா?

அடுக்காது; நடக்காது! அப்படி யாரையாவது கொல்லவேண்டுமென்றால் நறுமணம் முதலில் தன்னைத் தானே தான் கொன்றுக் கொள்வாள்- இது நிச்சயம்; நிச்சயத்திலும் நிச்சயம்!

இந்தத் தீர்மானத்துக்கு நான் வந்துக் கொண்டிருந்த போது, ‘என்ன யோசிக்கிறாய், நறுமணம்? ‘கல்யாணம், கல்யாணம்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறானே, காசு ஏது இவனிடம்?’ என்று யோசிக்கிறாயா? காலை ஏழுமனிக்கெல்லாம் வீட்டைவிட்டு வெளியே போய், இரவு பத்து மணிக்கு வீடு திரும்புகிறேனே, அதுவரை நான் என்ன செய்கிறேன் என்று நீ நினைத்துக் கொண்டி ருக்கிறாய்? ஆபீஸ் வேலையை மட்டும் பார்த்துவிட்டு வருகிறேன் என்று நினைத்துக் கொண்டிருக் கிறாயா? அதுதான் இல்லை; காலை ஏழரை மணியிலிருந்து பத்தரை மணி வரை ஒரு பிரசுரகர்த்தரிடம் ப்ரூப் பார்க்கிறேன்; மாலை ஆறு மணியிலிருந்து பத்துமணிவரை இரு பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளைகளுக்கு ட்யூஷன் சொல்கிறேன். பிரசுரகர்த்தர் மாதம் ரூபாய் அறுபது கொடுக் கிறார்.