பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 151

தம்பி ராமமூர்த்தியா யார் அது?”

‘கீழே உன்னை வரவேற்று உபசரித்தாரே, அவர் தான்!”

‘இதைச் சொல்ல உங்கள் நா கூசவில்லையா?”

‘ஏன் கூசவேண்டும்? ஒரு காலத்தில் வீடு தேடிவந்த விருந்தினருக்கு அமுது படைத்ததோடு, தன் அருமை மனைவியையும் படைத்தவன்தானே மனிதன்? அவனுடைய வாரிசுகள்தாமே நாம்?”

‘ஒரு காலத்தில் தாயென்றும் தாரமென்றும் பேதமில்லாமல்கூட மனிதன் இருந்திருக்கிறான்! அதற்காக நீங்களும் இப்போது பேதமில்லாமல் இருக்கிறீர்களா, என்ன?”

‘அது வேறு, இதுவேறு. இப்போதுள்ள நிலையில் என்னால்க் கெட்ட உன் வாழ்வு சிறக்க வேண்டுமானால், என் தம்பியால்தான் சிறக்கவேண்டும். அதைத்தவிர வேறு வழியில்லை நறுமணம், அதைத்தவிர வேறு வழியில்லை!”

‘இதையா நீங்கள் தியாகம் என்கிறீர்கள்?” ‘தியாகம் மட்டுமல்ல, உனக்காக நான் ஆற்றும் கடமையுங்கூட!’

‘அந்தக் கடமையைக் கண்ணகிக்கு ஆற்றக்கூடாதா? அந்தத் தியாகத்தைக் கண்ணகிக்காகச் செய்யக்கூடாதா?”

‘அவள் ஏற்கமாட்டாள்!” ‘நான் மட்டும் ஏற்பேன் என்று நீங்கள் எந்த வகையில் எதிர்பார்க்கிறீர்கள்?”

‘இன்னொருத்திக்காக என்னைத் தியாகம் செய்யும் உளவலிமை அவளுக்கில்லாவிட்டாலும் உனக்காவது இருக்குமென்று நான் எதிர்பார்ப்பதால்!"