உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 153

‘அதாவது, நாளை என்று தள்ளிப்போடாமல் இன்றே

நீங்கள் கொண்டிருக்கும் பெருநோக்கைப் போல?”

“ஆம், ஆம்!”

‘அந்தப் பெருநோக்குக்கு உங்களுடைய தம்பியைப் போன்றவர்களும் உடன்படுகிறார்களா, என்ன?”

‘இன்று உடன்படாவிட்டாலும், நாளை உடன்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!”

“நாளை உடன்படுவார்கள் என்ற நம்பிக்கை இன்று உங்களுக்கு உதவுமா என்ன?”

‘உதவாதுதான்!” ‘அப்படியிருக்கும்போது இன்றே நீங்கள் அவருடைய தலையில் என்னைக் கட்டிவைத்துவிட முடியுமென்று எப்படி நினைக்கிறீர்கள்?”

“ஒரு பொய், ஒரே ஒரு பொய் சொன்னால் போதும்; வெகு எளிதில் அவனை வென்று விடலாம்!”

‘அது என்ன பொய்?”

‘என்றோ ஒரு நாள் நமக்குள் ஏற்பட்டுவிட்ட அந்த உடலுறவை அவருக்குத் தெரியாமல் மறைத்துவிடுவது தான் அது!”

‘இந்தத் துரோகத்தைச் செய்ய நீங்கள் எப்படித் துணிகிறீர்கள்?”

“இதில் துணிவதற்கு என்ன இருக்கிறது. நன்மைக் காகத் தீமை செய்யலாம் என்று அறமே நம்மை அனுமதிக்கும்போது?”

‘அறம் அனுமதித்தாலும் அன்பு அதை எதிர்க்காதா?”