பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 விந்தன்

‘'எதிர்க்கும் - ஆனால் அறத்துக்கு மட்டும் அன்பு துணையன்று; மறத்துக்கும் அஃதே துணை என்பதை நீ உன்னுடைய நன்மைக்காகவாவது உணரவேண்டும்!”

‘நீங்கள் சொல்வதைப் பார்த்தால், சொன்னபடி கேட்காவிட்டால் உன்னை நான் கொன்றுவிடுவேன்!” என்று நீங்கள் என்னைப் பயமுறுத்துவது போலிருக்கிறதே?”

‘பைத்தியக்காரி சொன்னதைக் கேட்காவிட்டால் உன்னைநான் ஏன் கொல்லவேண்டும்? அவளே கொன்றுவிடுவாள்!”

‘இப்போதுள்ள நிலையில் என்னை யார் கொல்வதாயிருந்தாலும் சரி, அதை நான் வரவேற்கிறேன், ஆனால்...’

‘ஆனால் என்ன?”

‘என்னைக் கொன்ற குற்றத்துக்காக இன்னொருவர் நீதியின் பேரால் கொல்லப்படுவதைக்கூட நான் விரும்பவில்லை!”

‘அதற்காக’

‘என்னை நானே கொன்றுகொள்ளத்தயார்; உங்களுடைய நன்மைக்காக என்னை நானே கொன்று கொள்ளத்தயார்’ என்று நான் திரும்பினேன்.

என்னுடைய கையைச் சட்டென்று பற்றி, “நீ சாகப் பிறந்தவளல்ல; வாழப் பிறந்தவள்!’ என்றார் அவர்.

“அப்படியானால் நீங்களும் வாழுங்கள்; என்னையும் வாழவிடுங்கள்!’ என்றேன் நான்.

‘அதற்குள்ள ஒரு வழியைத் தான் இப்போது நான் சொன்னேன்; நீ கேட்கவில்லை. இன்னொரு வழியை வேண்டுமானால் சொல்லட்டுமா?"