பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 155

‘சொல்லுங்கள்”

“ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் விரும்பி யவுடனேயே கூடிவாழும் அந்த எதிர்கால இயற்கை வாழ்வை இன்றே நாம் வாழ்ந்து காட்டினால் என்ன?”

‘அதாவது, திருமணம் மணவினை போன்ற சடங்குகள் எதுவும் இல்லாமலா?”

“ஆம், ஆம்; அதுவே, அதுவே!”

தைக் கேட்டதும் என்னையும் அறியாமல் நான் சிரித்தேன்; ‘ஏன் சிரிக்கிறாய்?” என்று கேட்டார் அவர்.

‘ஒன்றுமில்லை; எதைச் செய்தாலும் நாலுபேருக்குத் தெரிந்து செய்வதில்லை என்ற தீர்மானம் போலும், உங்களுக்கு?’

‘அதுதானே அமைதியான வாழ்க்கை, அது தானே அமைதியான வாழ்க்கை!” என்று சொல்லிக்கொண்டே, அதுதான் சமயமென்று அவர் தன் கரை படிந்த கைகளால் என்னைச் சுற்றிவளைக்க முயன்றார்.

‘விடுங்கள்; தம்பி வந்துவிடப் போகிறார்!’ என்று நான் அவருடைய பிடியிலிருந்து விலகினேன்.

வரமாட்டான்; இங்கே பாடம் நடந்து கொண்டிருப்பது அவனுக்குத் தெரியும்’ என்றார் அவர்.

‘பாவம், கண்ணகிக்குக்கூட இங்கே பாடம் நடந்து கொண்டிருப்பதாகத் தான் அவர் என்னிடம் சொன்னார்!”

‘அதற்காக அந்தப் பாடத்தைத் தவிர வேற எந்தப் பாடமும் இங்கே நடப்பதில்லை என்று நீ நினைத்து விடாதே! அது எனக்குத் தொழில்; இது எனக்கு விளையாட்டு!” என்று சொல்லிக் கொண்டே அவர் என்னுடன் சற்றே விளையாட ஆரம்பித்தார்!