பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 13

‘ஒன்றுமில்லை; எனக்கென்னமோ இந்தக் குழந்தையை இங்கேயே வைத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது!”

‘ஏனாம்: ‘

‘அவன் உங்களையே உரித்து வைத்தாற்போல் இல்லையா?”

தூக்கி வாரிப் போட்டது ராமமூர்த்திக்கு. இருந்தாலும் அதைச் சமாளித்துக் கொண்டு, ‘அப்படியெல்லாம் சொல்லாதே, கல்யாணி! அவள் ஏதாவது விபரீதமாக நினைத்துக் கொண்டு விடப் போகிறாள்!” என்றான்.

‘இதில் விபரீதமாக நினைப்பதற்கு என்ன இருக்கிறது? உள்ளதைத்தானே சொல்கிறார்கள், அம்மா!’ என்று ஒரு போடு போட்டாள் விசாலம்.

‘'நாசமாய்ப் போச்சு போங்கள்! ஒருவரை உரித்து வைத்தாற் போலிருக்கிறது என்றால், அதனாலேயே அந்தக் குழந்தை அவருக்குப் பிறந்ததாக ஆகிவிடாது; அதை மட்டுமாவது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!’ என்று அடித்துச் சொல்லிவிட்டுக் குளிக்கும் அறையை நோக்கி நடந்தான் அவன்.

o e ** ••

சிறிது நேரத்துக்குப் பிறகு துவைத்துப் போட்ட துண்டொன்றை எடுத்துக் கொண்டு குளிக்கும் அறைச் சுவரின் மேல் போட்டு விட்டு வரலாமென்று சென்றபோது ‘செய்துவிட்டாள்; சொன்னது சொன்னபடி செய்தே விட்டாள்!” என்று உடம்பைத் தேய்த்துவிட்டுக் கொண்ட படி ராமமூர்த்தி முனகிக் கொண்டிருந்தது கல்யாணியின் காதில் விழுந்தது.

‘செய்து விட்டாளா, செய்யவேண்டியதுதான்!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டே, துண்டைச் சுவரின்