158 - வித்தன்
தன்னுடன் இயற்கையோடு இயைந்த வாழ்வை மேற்கொள்ள வேண்டுமென்பது இன்னொன்று
அதாவது, கள்ளக்காதலனாக இருக்க அவர் தயார்; கல்யாணம் செய்துகொண்டக் கணவனாக இருக்க அவர் தயாராயில்லை! *
முதல் வழி, அவருடைய வழியில் தியாக”மாகச் சுடர்விடுகிறது; இரண்டாவது வழி, அவருடைய வழியில் ‘இயற்கையோடு இயைந்த வாழ்'வாக ஒளி வீசுகிறது!
ஆகா! வாய்ப்பந்தலும், வார்த்தைப் பந்தலும் போடு வதில்தான் படித்தவர்கள் எவ்வளவு கெட்டிக்காரர்களா யிருக்கிறார்கள்!
“அது மட்டுமா? - முதல் வழி, அவருடைய வழியில் அன்பைக் காட்டுகிறது; இரண்டாவது வழி, அவருடைய வழியில் பண்பைக் காட்டுகிறது!”
நாசமாய்ப் போக; அவர்களுடைய அன்பும் பண்பும் நாசமாய்ப் போக! -
இப்படி நான் சபித்தேனோ இல்லையோ, “நாங்கள் ஒன்றும் நாசமாய்ப் போய்விடமாட்டோம்’ என்பது போல் தம்முடைய காரை எனக்கு அருகே கொண்டுவந்து நிறுத்தி, ‘ஏறிக்கொள்ளுங்கள்!’ என்றார் ராமமூர்த்தி.
“எதற்காக?” ‘உங்களை வீடுவரை கொண்டுபோய் விடுவதற்காக!” ‘'வேண்டாம்; நான் நடந்தே போய்விடுகிறேன்!” ‘ஏன், காரில் போனால் என்னவாம்’ ‘சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே?”
‘மாட்டேன்; சொல்லுங்கள்?"