பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 159

‘மானம் கெட்டவர்கள் மானாபிமானத்தோடு வாழ் பவர்களின் முகத்தில் விழிக்கவே வெட்கப்பட்டுக் கொண்டு ஓடுவது போலிருக்கிறது காரில் செல்வது!”

“சரியாகச் சொன்னீர்கள்; என்னுடைய அபிப்பிராயமும் அதுதான்!’

“அப்படியானால், இந்தக் கார்...’ “என்னுடையதல்ல; பேராசிரியருடையது!” ‘அவர்தான் சொன்னாரா, என்னை வீடுவரை கொண்டுபோய் விட்டுவிட்டு வரும்படி?” -

“ஆமாம்!’ ‘வீடுவரை தானேக் கொண்டு போய் விடச் சொன்னார், வேறெங்கும் கொண்டு போய்விடச் சொல்லவில்லையே?”

‘இல்லை!"என்று சொல்லிவிட்டு, அவர் சிரித்தார். ‘ஏன் சிரிக்கிறீர்கள்?'என்று கேட்டேன் நான். ‘ஒன்றுமில்லை உங்களுடைய கேள்வியின் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொண்டேன் - அதனால்தான் சிரித்தேன்!”

‘அப்படியானால் நீங்கள் அசடுபோல் நடந்து கொள்வதெல்லாம்...”

“இந்த உலகத்தில் தங்களைத்தாங்களே புத்திசாலிகள் என்று சொல்லிக்கொண்டு திரிபவர்களின் போக்கைப் புரிந்து கொள்வதற்காகத்தான் அம்மா, புரிந்து கொள்வதற்காகத் தான்!"என்றார் அவர்.

அவ்வளவுதான்; காரின் கதவை நானே திறந்துக் கொண்டு ஏறி உட்கார்ந்து, ‘விடுங்கள்!’ என்றேன் துணிந்து.