பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

160 விந்தன் "நீங்களும் மானம் கெட்டவர்களின் கோஷ்டியில் சேர்ந்துவிட்டீர்களா, என்ன?" ஆமாம், மானம் கெட்டவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள நானும் கொஞ்ச நாட்கள் மானம் கெட்டவளாக இருப்பதென்றுத் தீர்மானித்துவிட்டேன்!" அப்படியானால் என்னை நீங்கள் பின்பற்றலாம்!' என்று சொல்லிக்கொண்டே, அவர் காரை மேலே செலுத்தினார். "என்னுடைய கேள்வியின் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொண்டேன் என்றீர்களே, என்னத்தைப் புரிந்து கொண்டீர்கள்?” என்று நான் கேட்டேன். இது என் அறிவைச் சோதிக்கவா, அசட்டுத்த னத்தைச் சோதிக்கவா?” என்று கேட்டார் அவர். "இரண்டையும் தான்!" சரி; வீடுவரைதானே கொண்டுபோய் விடச் சொன்னார், வேறெங்கும் கொண்டுபோய் விடச் சொல்ல வில்லையே? என்று நீங்கள் என்னைக் கேட்டபோது என்ன நினைத்தீர்கள்?" "அதைத்தானே நானும் கேட்கிறேன்! அப்படியானால் நீங்கள் தூங்கவில்லை, விழித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது!" என்று சொல்லிவிட்டு, அவர் கேட்டார். "சினிமாவில் நடப்பது போல, ஏதாவது ஒரு மலைச் சிகரத்துக்குக் கொண்டு போய் உருட்டிக் கிருட்டி விட்டுவிடச் சொன்னாரோ, என்னவோ என்று நீங்கள் பயந்து போய் விட்டீர்கள் - இல்லையா?"