பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 164

“சரி: ரொம்ப சரி!’ என்று அவர் சொன்னதை ஆமோதித்துவிட்டு, நான் கேட்டேன்.

“பேராசிரியரை எத்தனை வருடங்களாகத் தெரியும் உங்களுக்கு?”

‘நாலைந்து வருடங்களாக!’

‘நாலைந்து வருடங்களாக நீங்கள் அவருடைய வீட்டில்தான் குடியிருக்கிறீர்களா?”

“அவருடைய வீட்டில் நான் குடியிருக்கவில்லை; என்னுடைய வீட்டில்தான் அவர் குடியிருக்கிறார்!’

‘உங்களுடைய வீட்டில் உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை போலிருக்கிறதே?”

‘அப்பா இருக்கிறார். ஆனால் அவர் இப்போது வீட்டில் இல்லை; ஊருக்குப் போயிருக்கிறார்”

‘'சாப்பாடு’

‘சமையற்காரனை நம்பியிருக்கிறோம்!”

“பேராசிரியரும் அவனைத்தான்நம்பியிருக்கிறாரா?”, ‘இல்லை; திருவாட்டி கண்ணகி அம்மையாரின் வீட்டிலிருந்து அவருக்குச் சாப்பாடு வந்துவிடுகிறது!”

o ‘ஒஹோ? * *

“என்ன ஒஹோ?”

‘ஒன்றுமில்லை; அதோ இருக்கிறது பாருங்கள் - அதுதான் என்னுடைய வீடு’ என்று நான் மழுப்பினேன்.”

அவர் சிரித்தார்; ‘ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்று நான் கேட்டேன்.

‘ஒன்றுமில்லை; உங்களுடைய வீடு எனக்குத் தெரியும்!"என்று அவரும் மழுப்பினார்.

td. upsi – 11