மனிதன் மாறவில்லை 167
போதுமானவையாயிருந்தன. “சரி. இவற்றை வைத்துக் கொண்டு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்று நான் கேட்டேன்.
‘உன்னை வாழவைக்கப் போகிறேன் குழந்தாய், உன்னை நான் , வாழவைக்கப் போகிறேன்!"என்றார் அவர் கனிவுடன்.
“என்னையா, அந்தக் கொலைகாரனுடனா? என்றேன் நான் அருவருப்புடன்.
“அதைப்பற்றி இப்போது பேசிப் பயனில்லை. தெரிந்தோ தெரியாமலோ நீ உன்னை அவனிடம் ஒப்படைத்து விட்டாய்! இனி உனக்காக நீ அவனைக் கல்யாணம் செய்துகொள்ளாவிட்டாலும், உன்னுடைய அண்ணனுக்காகவாவது கல்யாணம் செய்துகொள்ளத்தான் வேண்டும்’ என்றார் அவர் அழுத்தந்திருத்தமாக,
‘அண்ணன்! -ஆம், எனக்கும் ஒர் அண்ணன் இருக்கத் தான் இருக்கிறான் என்பது இப்போதுதான் என்னுடைய நினைவுக்கு வருகிறது!” என்றேன் நான். அவரை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் எங்கோ பார்த்தபடி.
‘அந்த அண்ணனுக்காக, நாலுபேருக்கு முன்னால் அவன் தலைநிமிர்ந்து நடக்கவேண்டும் என்பதற்காக, நீ அந்தக் கொலைகாரனுக்குப் பலியாகத்தான் வேண்டும், குழந்தாய், பலியாகத்தான் வேண்டும்!"என்றார் அவர், கண்களில் நீர்ததும்ப. -
அவ்வளவுதான்; ஏதோ ஒர் உணர்ச்சி என்னை உந்தித் தள்ள ‘அம்மா!’ என்று கதறிக்கொண்டே நான் அவருடைய மடியில் முகத்தைப் புதைத்துக்கொண்டுவிட்டேன்!
‘அம்மா இத்தனை நாட்க்ளுக்குப் பிறகாவது என்னை அம்மா!’ என்று அழைக்க ஒரு பெண் கிடைத்தாளே,