பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 விந்தன்

அதுவே போதும் எனக்கு’ என்று சொல்லிக்கொண்டே, அவர் என்னுடையத் தலையை அன்புடன் கோதி விட்டபடி, ‘இன்னொரு விஷயம் எனக்குத் தெரிய வேண்டும்; அதை நீ என்னிடம் சொல்வாயா?” என்றார் என்னை ஏறிட்டுப் பார்க்கமுடியாமல் எங்கோ பார்த்தபடி.

“இனி நான் உங்களிடம் எதையும் மறைக்க விரும்ப் வில்லை, அம்மா கேளுங்கள் சொல்கிறேன்!” என்றேன் நான்.

அவர் தன் குரலைத் தாழ்த்தி, “அவனுடன் தொடர்பு கொண்ட நாளிலிருந்து நீ மாதம் தவறாமல் தலை முழுகிக் கொண்டுவருகிறாயா?” என்றார் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே.

. ‘இல்லை அம்மா, இல்லை!” என்றேன் நான்,

நாத்தழுதழுக்க.

‘அப்படியானால் நீ உன் அண்ணனுக்காக அந்தத் தியாகத்தைச் செய்யாவிட்டாலும், உன்னுடைய வயிற்றில் உருவாகிக்கொண்டிருக்கும் பொடியனுக்காகவாவது நீ அந்தத் தியாகத்தைச் செய்யத்தான் வேண்டும்’ என்றார் அவர், பெருமூச்சுடன். >

‘செய்கிறேன் அம்மா, செய்கிறேன்!” என்றேன் நானும் பெருமூச்சுடன்.

‘சரி; நான் வருகிறேன்’ என்று அவர் என்னிடம் விடைபெற்றுக் கொண்டு எழுந்தார். நான் அவரைக் கொண்டுபோய் வாசல்வரை விட்டுவிட்டுத் திரும்பினேன்.

‘யாரடி, அது?’ என்று கேட்டாள் பாட்டி.

“வாத்தியாரம்மா, என்னைப் பார்க்க வந்திருந்தார்கள்!” என்றேன் நான்.