உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 விந்தன்

இதைக் கேட்டதும், புரிந்துகொண்டவரையில் போதும்; போய்வாருங்கள் என்று சொல்லி விடலாமா என்று தோன்றிற்று எனக்கு. இருந்தாலும், என்னைப் பெறாமலே பெற்றெடுத்துக்கொண்டு விட்ட என் தாயாருக்காக அதை ஒருவாறு அடக்கிக்கொண்டு “இருக்கலாம்; நீங்கள் சொல்லும் வேதனை இருவருக்கும் இருக்கலாம்; அதற்காகப் புனித மான உங்கள் கரங்களால் ‘புனிதமான என் பாதங்களைப் பற்றும் அளவுக்கா நீங்கள் துணிவது?” என்றேன் நான்.

‘துணியாமல் எப்படி இருக்கமுடியும்? மிருகமா யிருந்த என்னை மனிதனாக்கிவிட்ட தெய்வமல்லவா நீ?” ‘அதற்காகக் கோயில் என்னும் பேரால் மனிதன் தெய்வத்துக்குச் சமாதி கட்டிவிட்டதுபோல, நீங்களும் எனக்குச் சமாதி கட்டிவிடாதீர்கள்!”

“சீச்சீ, அப்படியெல்லாம் செய்வேனா நான்?” என்று சொல்லிக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்த அவர், “எங்கே உன் அண்ணாவைக் காணோம்?’ என்றார்.

‘வேலைக்குப் போயிருக்கிறார்!” என்றேன் நான்.

‘பாட்டி?” ‘கடைக்குப் போயிருக்கிறாள்!” ‘அப்படியானால் இப்போது நீ தனியாய்த்தான் இருக்கிறாயா?”

“சரி, நான் வந்த வேளை சரியில்லை போலிருக்கிறது; வருகிறேன்!” என்று அவர் திரும்பினார்.

இது எனக்கு ஆச்சரியத்திலும் ஆச்சரியமாயிருந்தது - இருக்காதா, ஒரு பெண்ணின் தனிமையை விரும்பாத அளவுக்கு அவர் திடீரென்று யோக்கியராகிவிட்டால்? - இருந்தாலும், அதைக்கூட நான் வெளியே காட்டிக்