பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 விந்தன்

‘வருவார்கள், வருவார்கள்!"என்றார் அவர். அப்போதும் அவரைவிடவில்லை பாட்டி; “வருவதற்கு முன்னால் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வரச்சொல்லுங்கள்’ என்று எச்சரித்தாள்.'அப்படியே ஆகட்டும்’ என்று சொல்லி விட்டுப் போனார் அவர்.

<> <> <> ஒரு வாரத்துக்குப் பிறகு ஒரு நாள் ராமமூர்த்தி வந்து ‘உங்கள் அண்ணா இருக்கிறாரா?’ என்று என்னை விசாரித்தார். ‘இல்லை; வெளியே போயிருக்கிறார்!” என்றேன் நான்;"சரி, அவர் வந்தால் நாளை பெண் பார்க்க வரப்போவதாகச் சொல்லுங்கள்!”

‘யார், யார் வரப்போகிறார்கள்?” “அது எனக்குத் தெரியாது!” “பேராசிரியர் வருகிறாரா?” ‘அதுவும் எனக்குத் தெரியாது” ‘வேறு என்னதான் தெரியும், உங்களுக்கு?” அவர் சொன்னது சொன்னபடி நடக்கத் தெரியும்’ ‘நல்ல வேளை சாப்பிடத்தான் தெரியும்’ என்று சொல்லாமல் விட்டீர்களே, அதுவே போதும் எனக்கு - போய் வாருங்கள்!’ என்றேன் நான். ‘உத்தரவு என்று சொல்லிவிட்டு, அவர் நடந்தார்.

<> <> <>

மறுநாள் மாலை என்னைப் பார்க்க மூவர் வந்திருந்தனர். அவர்களில் ஒருவரை மட்டுமே எனக்குத் தெரிந்திருந்தது; அவர்தான் திரு.ராமமூர்த்தி - இன்னொருவர் அவரால் எங்களுக்கு அறிமுகம் செய்து