பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 175

வைக்கப்பட்ட அவருடைய தகப்பனார்; மற்றொருவர் அவருடைய அத்தை'இவர்கள் இருவரும் உங்களைச்

சேர்ந்தவர்களாயிருக்கிறார்களே, அவரைச் சேர்ந்தவர் யாரும் வரவில்லையா?” என்று கேட்டான் என் அண்ணா.

‘இல்லை!” என்றார் ராமமூர்த்தி.

‘ஏன்?”

“அவருக்கென்று பெண் பார்க்க வந்திருந்தால்தானே அவரைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு?’

‘பின் யாருக்காக?’

‘எனக்காக!’

அவ்வளவுதான்; ‘'என்ன!’ என்று நான் என்னையும் மறந்து கத்திவிட்டேன்'ஏன், இந்தப் பிள்ளையாண்டானை உனக்குப் பிடிக்கவில்லையா, அம்மா’ என்றார் ஏதும் அறியாத ராமமூர்த்தியின் தகப்பனார். ‘பிடிக்காமல் என்ன? நாங்கள் நினைத்தது வேறு, நடப்பது வேறாயிருக் கிறதே என்றுதான் யோசிக் கிறோம்!’ என்றான் அண்ணா, அந்த நிலையிலும் தன்னை ஒருவாறு கட்டுப் படுத்திக்கொண்டு. ‘அப்படியானால் நாங்கள் வருகிறோம்!” என்று அவர்கள் கிளம்பினார்கள். ‘நான் அப்பொழுதே சொன்னேனே - கேட்டீர்களா அப்பா? பேராசிரியர் அனுபவித்த கவிதையை வேண்டுமானால் நானும் அனுபவிக்கலாம்; அவர் அனுபவித்த பெண்ணை நானும் அனுபவிக்கமுடியுமா?’ என்றார் ராமமூர்த்தி.

இதைச் சொல்லி வாயை மூடுவதற்குள் என் அண்ணா அவர்மேல் பாய்ந்து அவருடையக் குரல்வளையைப் பிடித்துக் கொண்டு, ‘யார் யாரை அனுபவிப்பது? சொல்; சொல்லாவிட்டால் உன்னுடைய குரல்வளையைப் பிடித்து நெரித்துவிடுவேன், நெரித்து!” என்று உறுமினான். ‘ என்னைக் கேட்டு என்னப் பிரயோசனம்? என்னுடைய குரல் வளையை நெரித்துத்தான் என்னப் பிரயோசனம்?