பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 விந்தன்

நேற்றிரவு சென்னையிலிருந்துக் கிளம்பியக் கல்கத்தா மெயிலில் போய்க்கொண்டிருக்கிறார், பேராசிரியர் - அவரைப் போய்க்கேளுங்கள்; அவருடைய குரல் வளையைப் பிடித்து நெரியுங்கள் என்றார் ராமமூர்த்தி, திக்குமுக்காடியபடி,

அத்துடன் அவரைவிட்டுவிட்டு, அயோக்கியப் பயல் இப்பொழுதல்லவா தெரிகிறது, அந்த ரூபாய் பத்தாயிரத்தை அவன் என்னுடைய மானத்துக்கு விலையாகக் கொடுத்திருக்கிறான் என்று!’ என்று கருவிக்கொண்டே அவன் என்னை நோக்கித் திரும்பினான், தன் பற்கைள நறநற வென்று கடித்தபடி.நான் பயந்து போய், ஐயோ! என்னைக் கொல்லாதீர்கள் அண்ணா, புனிதம் மிக்க உங்கள் கையால் என்னைக் கொல்லாதீர்கள், அண்ணா!"என்று கத்திக் கொண்டே என் அறைக்குள் ஒடிக் கதைவைச் சாத்தித் தாளிட்டுக் கொண்டு விட்டேன்!

<> <> <>

பெண் - குடும்பத்தில் அமைதி நிலவுவதற்கு மட்டுமா அவள் காரணமாயிருக்கிறாள்? புயல் அடிப்பதற்கும் அவள்தானே காரணமாயிருக்கிறாள்? அதற்கு நான் மட்டும் விதிவிலக்காயிருந்துவிட முடியுமா, என்ன? o

என்னால் எங்கள் வீட்டில் மூண்டுவிட்டப் புயல், எங்களுடையக் குடும்பத்தையே அல்லோலகல்லோலப் படுத்திவிட்டது. பேராசிரியரைத் தொடர்ந்து அன்றிரவே கல்கத்தாமெயிலில் சென்ற என் அண்ணா திரும்பி வரும்போது தன்னினைவோடு வரவில்லை; காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம்; கலவியிலே மானுடர்க்குக் கவலைதீரும்’ என்ற பாரதியின் பாட்டை அடிக்கடிப் பாடுவதும், அசடு வழியச் சிரிப்பதுமாக வந்தான். ‘ஏன், என்ன நடந்தது?” என்று என் பாட்டி கேட்டதற்கு