பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 177

அவன் சொன்ன பதில் தெளிவாகவும் இல்லை; ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவும் இல்லை.

தமிழ்மணம் ஆகா, தமிழ் மணம் என்று தம் மூக்கை அடிக்கடி இழுத்து, அப்படியும் இப்படியுமாகத் திரும்பி, முகர்ந்து முகர்ந்து பார்ப்பான், ஒரு சமயம்; என்ன நாற்றம், அப்பப்பா, என்ன நாற்றம்’ என்று தன் முகத்தைச் களித்து, மூக்கைப் பிடித்துக்கொண்டு ஒடுவான், இன்னொரு சமயம். கிருஷ்ணா! அடே, கிருஷ்ணா என்று வானத்தை நோக்கி அலறுவான், ஒரு சமயம்; அங்கிருந்து ஒடோடியும் வந்து கிருஷ்ணன் படத்துக்கு முன்னால் நின்று, ஏண்டா கிருஷ்ணா! என்னை நீ ஏன் காப்பாற்றினாய்? என்று வினயத்துடன் கேட்டான், இன்னொரு சமயம். இந்த நிலையிலே அவனை வைத்துக் கொண்டு மேலே என்ன செய்வதென்று தெரியாமல் என் பாட்டி விழித்துக்கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு நாள் அவன் காணாமற் போய்விட்டான்

ஒரு நாள் இரண்டு நாட்களாயின; ஒரு வாரம் இரண்டு வாரங்களாயின; ஒரு மாதம் இரண்டு மாதங்களாயின - போனவன் போனவன்தான்; திரும்பிவரவேயில்லை.

இதற்கிடையில் ஒருநாள் என்னைத்தேடிக்கொண்டு தலைவிரிகோலமாக ஓடோடியும் வந்த என் தாயார் - அதாவது கண்ணகி அம்மையார் வந்ததும் வராததுமாக இருக்கும்போதே அவசர அவசரமாகத் தெருக்கதவைச் சாத்தித்தாளிட்டுவிட்டு, ‘வந்து விட்டானா, என் கண்மணி வந்துவிட்டானா?’ என்று கண்ணிரும் கம்பலையுமாக என்னைக் கேட்டார்கள்.

‘எந்தக் கண்மணியைக் கேட்கிறீர்கள்?’ என்றேன் நான், ஒன்றும் புரியாமல். ‘உன்னுடைய அண்ணனைத் தான் கேட்கிறேன் - சொல்லுடி, சொல்லு’ என்றார்கள் அவர்கள் பரபரப்புடன்.

td. toss - 12