பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 183

ஆற்றில் விழுந்துவிட்டான் - அவன் விழுந்தானோ இல்லையோ ஆக்ஸிடெண்ட், ஆக்ஸிடெண்ட் என்று கத்தி, அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து, அற்புதமான ஒரு நாடகமே நடத்திக் காட்டிவிட்டான்.

பெயரில் மட்டுமே பேராசிரியனாயிருந்த இந்தச் சிற்றாசிரியன்! அவனுடைய நல்ல காலமோ என்னமோ, நான் அந்தக் காட்சியைப் பார்க்கும் பாவத்தைச் செய்யவில்லை; உன்னுடைய அண்ணன் நம்பி, ஐயோ, நறுமணம்’ என்று கத்திக்கொண்டே ஆற்றில் விழுந்ததுதான் தாமதம், ‘ஆ’ என்று அலறியபடி நான் மூர்ச்சையடைந்து விட்டேனாம். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதைப்பற்றியெல்லாம் அவன்தான் - அந்தப் பேராசிரியன்தான் என்னிடம் கதை கதையாகச் சொன்னான். அந்தக்கதையெல்லாம் இப்போது ஏன் நமக்கு? எப்படியோ உன் அண்ணன் உயிரோடு வந்து சேர்ந்துவிட்டான். அவனை நாம் உடனே யாராவது ஒரு மனோதத்துவ டாக்டரிடம் காட்ட வேண்டும். அடுத்தாற்போல் பேராசிரியனைப் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைக்கவேண்டும்...’

‘ஐயோ, வேண்டாம் அம்மா! நான் உயிரோடிருக்கும்வரை அந்தக் காரியத்தை மட்டும் நீங்கள் செய்துவிடாதீர்கள், அம்மா!’

‘போடி போ இப்படிப் பேசிப் பேசித்தான் பாரதப் பெண்குலமே பாழ்பட்டுக் கிடக்கிறது, இன்று’

‘இல்லை, அம்மா! அதற்குள்ள பெருமையே அதுதான்’

‘பெருமையாவது, சிறுமையாவது அதெல்லாம் ஒன்றுமில்லை; அந்தப் பெருமையில்லாத மற்ற நாட்டுப் பெண்கள் உரிமையோடு வாழவில்லையா? அதே உரிமையுடன் நாமும் வாழ்ந்தால் என்ன?”

“அப்படியென்றால்?"